11/06/2011
விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் தங்களது சாதனைகளின் மூலம் மக்களின் இதயங்களை கவர்வது வாடிக்கை. ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை இஸ்லாமிய நெறி கவர்ந்து ஈர்த்ததால் இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட நிகழ்வு கடந்தவாரம் அரங்கேறியது.
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டிக்காக வருகை தந்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் இஸ்லாத்தை இதய பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தானிய குத்துச்சண்டைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வந்த 6 பேரும் காமரூன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரும் முஃப்தி முஹம்மது நயீம் கலீமா சொல்லிக் கொடுக்க 9 வீரர்களும் முஸ்லிம்களாக மாறினர். அனைத்து விளையாட்டு வீரர்களும் பாரம்பரிய இஸ்லாமிய உடைகளை அணிந்து இருந்தது நெகிழ்ச்சியடைய செய்த நிகழ்ச்சியாக நடைபெற்றதாகவும் பாகிஸ்தானிய குத்துச்சண்டை கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் 9 பேருக்கும் இஸ்லாமிய பெயர் சூட்டப்பட்டது.
அலி அக்பர், முஹம்மது அலி, தைமூர் ஹுஸைன், ஃபசுர் ரஹ்மான், இக்பால் ஹுஸைன், முஹம்மது அக்ரம், முஹம்மது சமி, முஹம்மது யாசிர், முஹம்மது அர்ஷக் என இனி இவர்கள் அழைக்கப்படுவார்கள்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் குத்துசண்டைக் கழக சேர்மன் முஸ்லிம் உம்மாவில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் குத்துச்சண்டைக் கழக துணைத் தலைவர் இக்பால் ஹுஸைன் தெரிவிக்கி றார்.
பிற நாடுகளை விட முஸ்லிம் நாடுகளில் தங்களுக்கு கிடைத்த கண்ணியமும் விருந்தோம்பலும் முஸ்லிம்களின் அன்றாட வழிபாட்டு முறைகளும் தங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்ததாக குத்துச்சண்டை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி -உண்மை