Archive for டிசம்பர் 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்14-12-11 அன்று துளசி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாகஏற்றுக்கொண்டார். அவருக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன்தமிழாக்கம்,இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, தொழுகைச் சட்டங்கள், மற்றும் இஸ்லாமியஅடிப்படை பற்றி சகோதரர் பி.ஜே அவர்கள் உரையாற்றிய ஆடியோ, வீடியோகேசட்டுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்

புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரி

தமிழ்நாடு ஜமாஅத் கோவை கோவை மாவட்டத்தில் குமார் என்ற சகோதரர் 30.11.2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அவர் இஸ்லாத்தை ஏற்றது அவர் வீட்டுக்கு அறிவிக்காத காரணத்தால் மவ்லவி அன்சர் அவர்கள் இஸ்லாத்தை குறித்து அவருக்கு தினமும் ஒரு மணி நேரம் வகுப்பெடுக்கிறார்.

கோவையில் இஸ்லாத்தை ஏற்ற குமார்


கம்யூனிஷ ஆட்சியாளர்களால் இது நாள் வரை மத உரிமைகள் மறுக்கப்பட்ட பல சீனர்கள் வேலை நிமித்தமாக சவூதி வந்துள்ளனர். அதிலும் ஜெத்தா-மெககா-மெதீனா மெட்ரோ ரயில் திட்ட காண்ட்ராக்டும் தற்போது சைனாவுக்கே கிடைத்துள்ளது. 5000க்கும் மேற்பட்ட டெக்னீசியன்களும் தொழிலாளர்களும தற்போது சவுதி வந்துள்ளனர்.
கடவுள் என்றால் யார்? இறை தியானம் எப்படி இருக்கும்? மன அமைதியை இறை தியானத்தில் பெறுவது எப்படி என்றெல்லாம் தெரியாமலேயே வெறும் கார்ல் மாக்ஸை மட்டுமே படித்த இந்த இளைஞர்கள் இன்று இறை மார்க்கத்தால் கவரப்பட்டு அதிகமதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர்.

கம்யூனிஷ அரசு கார்ல் மாக்ஸையும், லெனினையும், யும் தான் வேதமாகவும் தூதர்களாகவும் இதுநாள் வரை காட்டி வந்தது. சவுதியின் சட்டதிட்டங்களும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரங்களையே நிறுத்தும் இந்நாட்டின் சட்டத்தை ஆச்சரியமுடன் பார்க்கின்றனர். எனது அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் 'அழைப்பு வழி காட்டல் மையத்தில் (ஜாலியாத்) தினமும் சீனர்களை பார்க்கிறேன். அரபி கற்றுக் கொள்ள ஆர்வப்படுவதையும், தொழுகைக்கு அழைப்பு விடுத்தவுடன் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு பள்ளியை நோக்கி பறந்து வருவதையும் தினமும் பார்த்து வருகிறேன். இவர்களின் உடல் அமைப்புக்கு தாடி சரியாக வளருவதில்லை. ஒரு அன்பருக்கு இரண்டே முடிகள் வளர்ந்துள்ளது. அதை கையால் லாவகமாக வருடிக் கொண்டு என்னோடு பேசும் அழகை என்னவென்பது?

சில மாதங்களுக்கு முன்பு 50 சீனர்கள் மொத்தமாக இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே! அதைததான் மேலே உள்ள காணொளியில் பார்க்கிறீர்கள். அனைவரும் இளைஞர்கள். படித்தவர்கள். நல்ல சமபளத்தில் உள்ளவர்கள். எனவே ஏதோ பணம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இவர்கள் மாறவில்லை. எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் வெற்றிடமாக இருந்த மூளை இஸ்லாமிய நடவடிக்கைகளை பார்த்தவுடன் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் உடன் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது. சீனர்களின் பழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இனி இவர்கள் தங்களின் உணவு முறைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும். எதைப்பற்றியும் கவலைபடாமல் ஏக இறைவனை தங்களின் இறைவனாக ஏற்ற இவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

நமது நாடடில் இந்து மதத்தின் ஆதி மக்களை தொடவும், வேதம் படிப்பிக்கவும், கோவிலுக்குள் நுழைவிப்பதற்கும் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதே போன்றுதான் 1400 வருடங்களுக்கு முன்பு மெக்காவிலும் மதினாவிலும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது. தங்கள் மொழியே உயர்ந்த மொழி. மற்றவர்களின் மொழிகள் ஊமை மொழிகள் என்று ஏளனம் பேசி வந்தனர். பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவார்களாம். சிலர் பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டால் சமூகத்துக்குள் வர வெடகப்பட்டுக் கொண்டு சமூகத்திலிருந்து சில வாரங்களுக்கு தலைமறைவாகி விடுவாரகளாம. குலத்தின் பெயராலும் கோத்திரத்தின் பெயராலும் பல ஆண்டுகள் வரை சண்டையிடுவார்களாம். இப்படிப்பட்ட மூர்க்கக் குணத்துக்கு சொந்தமான சவுதிகளை இஸ்லாம் எந்த அளவு பண்படுத்தியிருக்கிறது என்பதைத்தான் காணொளியில் நாம் பார்க்கிறோம். மொழியிலும் நிறத்திலும் தோற்றத்திலும் முற்றிலும் மாறுபட்ட சீனர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் ஆரத தழுவி நெற்றிக்கு மேல் அன்பினால் முத்தமிடும் இந்த பக்குவத்தை அந்த அரபுகளுக்கு கொடுத்தது எது? இஸ்லாம் அல்லவா?

ஒரு சீனர் இஸ்லாத்தை ஏற்றால் அவர் மூலம் நூற்றுக்கணக்கான பேர் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜெத்தாவில் கூட 600 சீனர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகவும் இந்த புதியவர்கள் மற்ற 5000 பேரை பிரசாரத்தின் மூலம் கொண்டு வந்துவிட முயற்ச்சிப்பதாகவும் அரம்கோ செய்தியும் தெரிவிக்கிறது. இதே நிலை தொடருமானால் இன்னும் 10 அல்லது 12 வருடங்களில் சீனாவில் இஸ்லாம் கம்யூனிஸத்தை வீழ்த்தி விடும்.
'இறைவனின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறைவனை மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமையாக்காமல் விட மாட்டான்'
-குர்ஆன் 9:32

50 Chinese convert to Islam in Saudi Arabia - July 2011Click Here...

50 சீனர்கள் மொத்தமாக இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

துபாய் டூரிஸம் அண்ட் கமர்ஷியல் மார்கட்டிங் துறையின் கீழ் அல்த்வாரில் உமர் ஃபெனல்பாரின் உரைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிலிப்பைன்ஸில் இவருடைய உரையைக்கேட்டு ஒரேநாளில் 99 பேர் இஸ்லாத்தை தழுவியதுதான் சாதனையாக இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த பெண்மணிகளாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் 28.11.2011 அன்று ரவி என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அவரை தாவா சென்டருக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை செல்வபுரம் தெற்கில் இஸ்லாத்தை ஏற்ற ரவி


கடந்த 18-11-11 அன்று மாவட்ட தலைமையில் கோட்டாரை சேர்ந்த மது என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு தம்மாம் மண்டல தலைவர் சகோ. அமீன் அவர்கள் கலிமா சொல்லி கொடுத்தார். மன்சூர் என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. மாவட்ட செயலாளர் சகோ. நாசர் அவர்கள் குர்ஆனை அன்பளிப்பாக வழங்கினார்.

இஸ்லாத்தை ஏற்று கொண்ட மது



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 24 / 6 /
2011 அன்று கோயம்புத்துரை சேர்ந்த பிரபு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இக்பால் என மாற்றிக் கொண்டார், கிளைத்தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாம் பற்றி விளக்கியதோடு பொருளாளர் சபியுதீன் அவர்கள் மூலம் . இவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

கோயம்புத்துரை சேர்ந்த பிரபு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டையில் கடந்த 13.11.2011 அன்று சக்ரவர்த்தி என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை முஹம்மது ஹசன் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலி்ல்லாஹ்!
மேலும் அன்ற தினம் எதியான் என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை அஹ்மத ஹுசைன் என மாற்றிக் கொண்டார்.

சுல்தான் பேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற சக்ரவர்த்தி மற்றும் எதியான்