11/13/2011


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இஸ்லாமியப் பிரச்சாரம் நாடு முழுவதும் வீரியமாக செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே!
அந்த வகையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாற்று மத பிரச்சாரத்தின் விளைவாக இஸ்லாத்திற்கு இணைபவர்களின் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 18.07.2011 அன்று ஜமாத்தின் தலைமையகத்தில் வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
ஜமாத்தின் துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் ரிஸா யுசுப் அவர்கள் அமெரிக்க சகோதரிக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்ததுடன் ஆங்கில மொழியில் இஸ்லாத்தின் முக்கியத்துவம் மற்றும் இஸ்லாமிய சட்டதிட்டங்களையும் தெளிவுபடுத்தினார்.
சகோதரர் ரிஸா யுசுப் அவர்கள் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான கடிதத்தை தயாரிப்பதையும், அருகில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க சகோதரியையும் சகோதரர் ஸத்தார் மற்றும் சகோதரர் ரிஸ்லான் ஆகியோரையும் புகைப்படத்தில் காண்கிறீர்கள்.
குறிப்பு :
இஸ்லாத்தில் இணைபவர்களுக்கான SLTJயின் தனிப் பிரிவு ஒன்று அன்மையில் ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments