Archive for 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில்14-12-11 அன்று துளசி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாகஏற்றுக்கொண்டார். அவருக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன்தமிழாக்கம்,இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, தொழுகைச் சட்டங்கள், மற்றும் இஸ்லாமியஅடிப்படை பற்றி சகோதரர் பி.ஜே அவர்கள் உரையாற்றிய ஆடியோ, வீடியோகேசட்டுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்

புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரி

தமிழ்நாடு ஜமாஅத் கோவை கோவை மாவட்டத்தில் குமார் என்ற சகோதரர் 30.11.2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அவர் இஸ்லாத்தை ஏற்றது அவர் வீட்டுக்கு அறிவிக்காத காரணத்தால் மவ்லவி அன்சர் அவர்கள் இஸ்லாத்தை குறித்து அவருக்கு தினமும் ஒரு மணி நேரம் வகுப்பெடுக்கிறார்.

கோவையில் இஸ்லாத்தை ஏற்ற குமார்


கம்யூனிஷ ஆட்சியாளர்களால் இது நாள் வரை மத உரிமைகள் மறுக்கப்பட்ட பல சீனர்கள் வேலை நிமித்தமாக சவூதி வந்துள்ளனர். அதிலும் ஜெத்தா-மெககா-மெதீனா மெட்ரோ ரயில் திட்ட காண்ட்ராக்டும் தற்போது சைனாவுக்கே கிடைத்துள்ளது. 5000க்கும் மேற்பட்ட டெக்னீசியன்களும் தொழிலாளர்களும தற்போது சவுதி வந்துள்ளனர்.
கடவுள் என்றால் யார்? இறை தியானம் எப்படி இருக்கும்? மன அமைதியை இறை தியானத்தில் பெறுவது எப்படி என்றெல்லாம் தெரியாமலேயே வெறும் கார்ல் மாக்ஸை மட்டுமே படித்த இந்த இளைஞர்கள் இன்று இறை மார்க்கத்தால் கவரப்பட்டு அதிகமதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர்.

கம்யூனிஷ அரசு கார்ல் மாக்ஸையும், லெனினையும், யும் தான் வேதமாகவும் தூதர்களாகவும் இதுநாள் வரை காட்டி வந்தது. சவுதியின் சட்டதிட்டங்களும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரங்களையே நிறுத்தும் இந்நாட்டின் சட்டத்தை ஆச்சரியமுடன் பார்க்கின்றனர். எனது அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் 'அழைப்பு வழி காட்டல் மையத்தில் (ஜாலியாத்) தினமும் சீனர்களை பார்க்கிறேன். அரபி கற்றுக் கொள்ள ஆர்வப்படுவதையும், தொழுகைக்கு அழைப்பு விடுத்தவுடன் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு பள்ளியை நோக்கி பறந்து வருவதையும் தினமும் பார்த்து வருகிறேன். இவர்களின் உடல் அமைப்புக்கு தாடி சரியாக வளருவதில்லை. ஒரு அன்பருக்கு இரண்டே முடிகள் வளர்ந்துள்ளது. அதை கையால் லாவகமாக வருடிக் கொண்டு என்னோடு பேசும் அழகை என்னவென்பது?

சில மாதங்களுக்கு முன்பு 50 சீனர்கள் மொத்தமாக இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே! அதைததான் மேலே உள்ள காணொளியில் பார்க்கிறீர்கள். அனைவரும் இளைஞர்கள். படித்தவர்கள். நல்ல சமபளத்தில் உள்ளவர்கள். எனவே ஏதோ பணம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இவர்கள் மாறவில்லை. எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் வெற்றிடமாக இருந்த மூளை இஸ்லாமிய நடவடிக்கைகளை பார்த்தவுடன் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் உடன் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது. சீனர்களின் பழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இனி இவர்கள் தங்களின் உணவு முறைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும். எதைப்பற்றியும் கவலைபடாமல் ஏக இறைவனை தங்களின் இறைவனாக ஏற்ற இவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

நமது நாடடில் இந்து மதத்தின் ஆதி மக்களை தொடவும், வேதம் படிப்பிக்கவும், கோவிலுக்குள் நுழைவிப்பதற்கும் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதே போன்றுதான் 1400 வருடங்களுக்கு முன்பு மெக்காவிலும் மதினாவிலும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது. தங்கள் மொழியே உயர்ந்த மொழி. மற்றவர்களின் மொழிகள் ஊமை மொழிகள் என்று ஏளனம் பேசி வந்தனர். பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவார்களாம். சிலர் பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டால் சமூகத்துக்குள் வர வெடகப்பட்டுக் கொண்டு சமூகத்திலிருந்து சில வாரங்களுக்கு தலைமறைவாகி விடுவாரகளாம. குலத்தின் பெயராலும் கோத்திரத்தின் பெயராலும் பல ஆண்டுகள் வரை சண்டையிடுவார்களாம். இப்படிப்பட்ட மூர்க்கக் குணத்துக்கு சொந்தமான சவுதிகளை இஸ்லாம் எந்த அளவு பண்படுத்தியிருக்கிறது என்பதைத்தான் காணொளியில் நாம் பார்க்கிறோம். மொழியிலும் நிறத்திலும் தோற்றத்திலும் முற்றிலும் மாறுபட்ட சீனர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் ஆரத தழுவி நெற்றிக்கு மேல் அன்பினால் முத்தமிடும் இந்த பக்குவத்தை அந்த அரபுகளுக்கு கொடுத்தது எது? இஸ்லாம் அல்லவா?

ஒரு சீனர் இஸ்லாத்தை ஏற்றால் அவர் மூலம் நூற்றுக்கணக்கான பேர் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜெத்தாவில் கூட 600 சீனர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகவும் இந்த புதியவர்கள் மற்ற 5000 பேரை பிரசாரத்தின் மூலம் கொண்டு வந்துவிட முயற்ச்சிப்பதாகவும் அரம்கோ செய்தியும் தெரிவிக்கிறது. இதே நிலை தொடருமானால் இன்னும் 10 அல்லது 12 வருடங்களில் சீனாவில் இஸ்லாம் கம்யூனிஸத்தை வீழ்த்தி விடும்.
'இறைவனின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறைவனை மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமையாக்காமல் விட மாட்டான்'
-குர்ஆன் 9:32

50 Chinese convert to Islam in Saudi Arabia - July 2011Click Here...

50 சீனர்கள் மொத்தமாக இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

துபாய் டூரிஸம் அண்ட் கமர்ஷியல் மார்கட்டிங் துறையின் கீழ் அல்த்வாரில் உமர் ஃபெனல்பாரின் உரைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிலிப்பைன்ஸில் இவருடைய உரையைக்கேட்டு ஒரேநாளில் 99 பேர் இஸ்லாத்தை தழுவியதுதான் சாதனையாக இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த பெண்மணிகளாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் 28.11.2011 அன்று ரவி என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அவரை தாவா சென்டருக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை செல்வபுரம் தெற்கில் இஸ்லாத்தை ஏற்ற ரவி


கடந்த 18-11-11 அன்று மாவட்ட தலைமையில் கோட்டாரை சேர்ந்த மது என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு தம்மாம் மண்டல தலைவர் சகோ. அமீன் அவர்கள் கலிமா சொல்லி கொடுத்தார். மன்சூர் என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. மாவட்ட செயலாளர் சகோ. நாசர் அவர்கள் குர்ஆனை அன்பளிப்பாக வழங்கினார்.

இஸ்லாத்தை ஏற்று கொண்ட மது



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 24 / 6 /
2011 அன்று கோயம்புத்துரை சேர்ந்த பிரபு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இக்பால் என மாற்றிக் கொண்டார், கிளைத்தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாம் பற்றி விளக்கியதோடு பொருளாளர் சபியுதீன் அவர்கள் மூலம் . இவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

கோயம்புத்துரை சேர்ந்த பிரபு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டையில் கடந்த 13.11.2011 அன்று சக்ரவர்த்தி என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை முஹம்மது ஹசன் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலி்ல்லாஹ்!
மேலும் அன்ற தினம் எதியான் என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை அஹ்மத ஹுசைன் என மாற்றிக் கொண்டார்.

சுல்தான் பேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற சக்ரவர்த்தி மற்றும் எதியான்

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு
(audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்

சேந்தையம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது தொடர்பாக ஈ.வெ.ரா. பெரியார் ஆற்றிய உரை


ஆடியோ கேட்க க்ளிக் செய்யவும்.

********************



THANKS TO : நீதியின் குரல். http://neetheinkural.blogspot.com/2010/04/audio.html

சேந்தையம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது



ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக – பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்.
ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும் இணையத்தில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக்டர் மதுமிதாவின் வழக்கம். பணியின் காரணமாக, தன்னுடைய சகோதரருடன் நொய்டா நகரில் இவரும் மருத்துவரான கணவர் கொல்கத்தாவிலும் சிறிது காலம் பிரிந்து வசிக்க வேண்டிய சூழலில் ஒரு நாள் மிக யதார்த்தமாக இணையத் தளங்களை உலா வந்து கொண்டிருந்த டாக்டர் மதுமிதாவின் கண்ணில் ஆங்கில மொழியாக்கக் குர்ஆன் பிரதியொன்று எதேச்சையாகப்பட்டது.
இதைப் பற்றி மதுமிதா கூறுகையில் “அதிக மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சூழலில் நான் வளரவில்லை. ஆனாலும் எதேச்சையாகக் குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த எனக்கு புதியதொரு விஷயமான இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. என்னுடைய MD பட்டப்படிப்பினை முடித்த பிறகு எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம் இணைய தளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தேட ஆரம்பித்தேன்” என்றார்.
ஆர்வமிகுதியில் இஸ்லாம் தொடர்பான நிறைய புத்தகங்களையும் இணைய தளங்களையும் தொடர்ந்து வாசித்து வந்த மதுமிதா, தன் மனதில் இஸ்லாம் பற்றிய ஓர் ஐயத்தை ஆர்குட் இணைய தளத்தில் “இஸ்லாம் & முஸ்லிம்” என்ற தலைப்புள்ள கலந்துரையாடலில் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு ஃபெரோஸ் ஹுசைன் என்பவர் தொடர்ந்து பதில்கள் அளித்து வந்தாலும் அவற்றில் மதுமிதாவுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.
திருப்தி அடையாத சூழலிலேயே அடுத்த கேள்வியான “என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு திருப்தியளிக்கும்படி நான் மருத்துவம் செய்வது அல்லாஹ்விற்கு சேவகம் செய்வதாகுமா?” என்பதை முன் வைத்தார்.
இக்கேள்விக்கு பெங்களூருவில் IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் முகம் தெரியாத முஹம்மத் யாஸீன் என்பவர் முழுமையான விளக்கங்களை எழுதினார்.
மிகவும் திருப்தியைப் பெற்றுத் தந்த அந்த பதிலைத் தொடர்ந்து, தன் மனதில் இஸ்லாம் பற்றி எஞ்சியிருந்த கேள்விகள் அடுக்கடுக்காய் எழ, அவற்றைத் தொடர்ந்து எழுப்பினார் மதுமிதா. இறைமறை/ நபிமொழியின் வெளிச்சத்தில் அவற்றிற்குத் துல்லியமான விடைகள் கிடைத்து விட்ட திருப்தியில் மதுமிதா மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மத ரீதியிலான தடைகள், பல தயக்கங்கள் ஆகியற்றை உதறித் தள்ளி விட்டு, பதில் அளித்த முஹம்மத் யாஸீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வெளிப் படுத்திக் கொண்டார் மதுமிதா.
“மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நேர்ந்து விடும். இறப்பது எப்போது என்று தெரியாத சூழலில் உடனடியாகச் சத்திய மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்” என்ற முஹம்மத் யாஸீனின் வார்த்தைகள் சத்தியத்தைத் தேடி அலைந்த டாக்டர். மதுமிதாவின் மனதை அலைகழித்தது.
குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது… சத்தியமே வென்றது” என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).
குழப்பங்கள் தெளிய சிறிது தனிமையை விரும்பிய மதுமிதா சில மாதங்களில் தமது வீட்டிலிருந்து வெளியேறி கரோல்பாக் பகுதியில் உள்ள ராமானுஜன் விருந்தினர் மாளிகைக்குக் குடியேறினார். விருந்தினர் மாளிகையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி வெகு தூரம் பயணிக்க நேர்ந்தது. பயணங்களில் நிறைய வாசிப்புகளும் சத்தியத்தைத் தேடிய சிந்தனைகளுமாகக் கழிந்தன.
மனம் ஓர் உண்மையைச் சுட்டெரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பர் 3, 2007 அன்று திடீரென்று ராமானுஜன் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறினார். பெங்களூருவிற்கு விமானம் ஏறினார். ஷிஃபா ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் ‘ஜம்மியத்துல் முஹ்ஸினாத்’ பெண்கள் கல்விக்கூடத்தின் படியேறி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் (ஆனாலும் பெயரில் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளைச் செய்யவில்லை).
நான்கு நாட்களுக்கு பின்னர் இதனையறிந்த மதுமிதாவின் கணவரும் கண் மருத்துவருமான டாக்டர் சுபிஜே ஸின்ஹா, அருகிலுள்ள காவல் நிலையத்தில், “தன் மனைவியை பெங்களூருவைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக”ப் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு உடனடியாக பெங்களூருவைச் சேர்ந்த 32 வயதான முஹம்மத் யாஸீன் மற்றும் அவர் நண்பரான 31 வயதுடைய ஷாஜி யூஸுப் ஆகிய இரு மென்பொருள் பொறியாளர்களைக் கைது செய்தது. இவர்கள் இருவரும் டாக்டர் மதுமிதாவைக் கடத்தியதாகவும் பணயத் தொகை கேட்டு டாக்டர் மதுமிதா குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும் அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டது.
பெங்களூருவில் இருந்த டாக்டர் மதுமிதாவை மீட்க, பெண்கள் கல்விக்கூடத்துக்குள் திடீர் சோதனை என்ற பெயரில் புகுந்த காவல் துறையினர், மதுமிதாவின் கூக்குரலுக்குச் செவி சாய்க்காமல் பலவந்தமாக அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர்.
மேற்கு பெனகலில் உள்ள துர்காபூர் வீட்டில் பல மாதங்கள் மதுமிதா சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவரது இஸ்லாத்தைப் பற்றிய தேடல்களுக்கும் சிந்தனைகளுக்கும் சிறையிட யாராலும் முடியவில்லை. கடந்த வருடம் 2008 மார்ச் மாதம், தயக்கத் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, முழுமையாக இஸ்லாத்தைத் தழுவினார். மதுமிதா மிஷ்ரா என்ற தமது பெயரை மாற்றி சந்தோஷமாக ஜைனப் எனத் தேர்வு செய்து, இயற்கை மார்க்கத்திற்குத் திரும்பினார்.
“வெயிலில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் அணிந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்று ஹிஜாபில் எனது பெண்மைக்கு முழுப் பாதுகாப்பு உள்ளதென்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் என் குடும்பத்தினரை இழந்து விட்டேன். ஆனால் நான் நிர்க்கதியாய் இல்லை. நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இஸ்லாத்தை அறியும் முயற்சியில் என்னுடைய முழு நேரத்தைச் செலவு செய்து வருகிறேன்” என்று உறுதியுடன் பேசுகிறார் டாக்டர் மதுமிதா என்ற ஜைனப்.
ஜம்மியத்துல் முஹ்ஸினாத் பெண்கள் கல்விக்கூடத்திலிருந்து தன்னைப் பலவந்தமாக அழைத்து வந்த பின்னர், “முஹம்மது யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் குற்றவாளிகள்” என்ற தொனியில் ஒரு புகார் எழுதித் தருமாறு டெல்லி காவல்துறையினர் தம்மைத் தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறுகிறார். தன்னை அவ்விருவரும் கடத்தியதாகவும் பிணைத் தொகையாகப் பத்து இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் வளைகுடா நாட்டில் பெரிய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியதாகவும் காவல்துறை போலியாகத் தயாரித்திருந்த அந்தப் புகாரில் அபாண்டமாக எழுதப் பட்டிருந்தது என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).
ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது முழுக்க முழுக்க தமது விருப்பத்தின் பெயரிலேயே என்றும் தம்மை எவரும் கட்டாயப் படுத்திடவில்லை என்றும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் CrPC செக்க்ஷன் 164 இன்படி எழுதிக் கையொப்பமிட்டுள்ளார் டாக்டர் ஜைனப். விசாரணையில் வெட்ட வெளிச்சமான பொய்களுக்குப் பின்பு, நீதிமன்ற உத்தரவின்படி வேறு வழியின்றி அப்பாவிகளான பொறியாளர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர்.
“முஹம்மத் யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் கடந்த வாரம் விடுதலை செய்யப் பட்டது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது… சத்தியமே வென்றது” என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).
இஸ்லாத்தைத் தாம் விருப்பப்பட்டு ஏற்ற ஒரே காரணத்துக்காக டெல்லி காவல்துறையின் பிரத்யேக சிறைச்சாலைக்கும் விசாரணை அறைகளுக்கும் நீதி மன்றங்களுக்கும், தான் அலைக்கழிக்கப் பட்டதை நினைவு கூர்கிறார் மதுமிதா.
கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய கடந்த இரு வருடங்களைத் தாம் மறக்க விரும்புவதாகக் கூறுகிறார் டாக்டர் ஜைனப். “மன்னிப்பதை இஸ்லாம் போதிக்கிறது. அபாண்ட பழிகளைச் சுமத்தி இரு அப்பாவிகளின் குடும்பத்தினரை அவதிக்குள்ளாக்கிய என்னுடைய மாஜி கணவரையும் அவரோடு கைகோத்துக் கொண்டு தவறிழைத்த காவல் துறையினரையும் நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன்” என்றார் டாக்டர் ஜைனப்.

இஸ்லாத்தை தழுவிய டாக்டர் மதுமிதா மிஷ்ரா

அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!
நீண்டநெடுங்காலமாக கிருஸ்துவ பாரம்பரியத்தை கொண்ட  இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனியான லாரன் பூத் சமீபத்தில் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இதை அவரே அறிவித்துள்ளார்.
பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இவர். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த அவர் அங்கு இஸ்லாமிய மார்க்கத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமாக தன்னை அறிவித்துக் கொண்டார்.
உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.
சமீபத்தில், இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொகண்ட உலக அமைதி மற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில், பூத்தும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் மதம் மாறியிருக்கலாமோ என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் பூத்.
ஈரானில் வைத்து தான் இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன் என கூறும் 43 வயதாகும் பூத், இப்போது தான் தினசரி ஐந்து வேளை தொழுவதாகும், சில சமயம் மசூதிக்கும் போவதாகும் கடந்த 45 நாட்களாக ஆல்கஹால் கலந்த பானம் எதையும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது வெளியில் செல்லும்போது முஸ்லீம் பெண்களைப் போல தனது தலையைச் சுற்றிலும் துணி கட்டிக் கொள்கிறார் பூத். எதிர்காலத்தில் புர்க்கா அணியவும் முடிவு செய்துள்ளாராம். குரானை தினசரி படிக்கிறாராம்.
தனது இந்த மதமாற்றம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பது தனக்குத் தெரியும் என்று கூறும் பூத், ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையுண்டு என்பதை நான் அறிவேன் என்கிறார்.
பூத்தின் மதமாற்றம் குறித்து செரி பிளேரும், டோனி பிளேரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
டோனி பிளேரே 2007ம் ஆண்டு வரை சர்ச் ஆப் இங்கிலாந்தில் உறுப்பினராக இருந்தவர்தான். அதன் பின்னர்தான் அவர் ரோமன் கத்தோலிக்கராக மாறினார். செர்ரி பிளேர் ஆரம்பத்திலிருந்தே ரோமன் கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பூத், மார்னிங் ஸ்டார் என்ற கம்யூனிஸ்ட் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர் என்று காட்டமாக கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷியா கொள்கையினை கொண்ட ஈரானின் தொடர்புகள் மூலம் இஸ்லாத்தை ஏற்ற லாரன்ஸ் பூத், மிக விரைவில் இஸ்லாத்தின் உண்மையான விஷயங்களை அறிந்து மார்க்க பிரச்சாராக மாறுவார் என பிரார்த்திப்போம்.
தகவல் : அபூ உமைமா.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் உறவினர் இஸ்லாத்தை ஏற்றார்.

திருத்துறைபூண்டி 1 TNTJ கிளையில் தஞ்சநாதன் என்பவர் தனது வாழ்க்கை நெறியாக 21.11.2011 அன்று இஸ்லாத்தை ஏற்றார் இப்ராஹிம் என பெயரை மாற்றிக்கொண்டார் நகர tntj மூலம் சட்டப்படி பெயர் மாற்றத்திற்கு முயற்சிக்கப்படுகிறது

தஞ்சநாதன் என்பவர் இஸ்லாத்தை ஏற்றார்



படத்தில் இருப்பது ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் வசித்து வரும் முஸ்லிம் தம்பதியினர் (மாற்று திறனாளி பெண் இஸ்லாத்தை ஏற்றவர்) . இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதிகாரிகள் அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்காமல் இது வரையிலும் இழுத்தடித்து வருகின்றனர்.
சரி கலக்ட்டரிடம் இது பற்றி மனு கொடுக்கலாம் என்று இருவரும் முடிவு செய்து குறை தீர்க்கும் நாள் அன்று கலக்ட்டர் அலுவலகத்திற்கு தனது பெண் குழந்தையுடன் இருவரும் தவழ்ந்து சென்றுள்ளனர்.
ஆனால் அங்கும் அவர்களுக்கு ஏமாற்றமே.. கலக்ட்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் இவர்களுக்கு சரியாக பதில் அளிக்கவில்லை!
எனவே கோபமடைந்த இருவரும் அங்கேயே கதறி அழுது அதிகாரிகளுக்கு சாபம் கொடுத்துள்ளனர். (பாவம் .. மாற்றுதிறனாளிகளால் வேறு என்ன செய்ய முடியும்)
இவர்களை பார்த்தால் யாருக்கும் பரிதாபம் வரும் ஆனால் ஏன் இந்த அதிகாரிகளுக்கு வரவில்லை? இவர்கள் முஸ்லிமாக இருப்பதாலா?
2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 2 நாளில் ரேஷன் கார்டு தருவதாக கூறுகின்றனர். இவர்களுக்கு மனிதாபிமானமே இல்ல எனக் கணவர்  அப்துர் ரஹீம் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது. தேர்தல் நேரத்தில் அரசிற்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட கலக்ட்டரை உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது

ரேஷன் கார்டுகள் வழங்குவதில் அதிகாரிகள் பகல் கொள்ளையடிக்கின்றனர். மேலும் லஞ்சம் தரவில்லை எனில் பொதுமக்களை குறிப்பாக முஸ்லிம்களை பெரிதும் அலைக்கழிக்கின்றனர்.
”உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை” தொடர்பாக பின் வரும் தமிழ அரசின் இணையதளம் மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்:
லஞ்சம் வாங்குவோரை மாட்டி விட மத்திய அரசின் புதிய ஆன்லைன் திட்டம்:
http://www.tntj.net/உங்கள்-பகுதி/செய்திகள்/central-vigilance-commission-vigeye/

படத்தில் இருப்பது ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் வசித்து வரும் முஸ்லிம் தம்பதியினர் (மாற்று திறனாளி பெண் இஸ்லாத்தை ஏற்றவர்


மரியம் ஜமீலா நியூயார்க்கில் 1934 -ம் ஆண்டு, பொருளாதாரப் பெருவீழ்ச்சியின் உச்சகட்டக் காலத்தில் பிறந்தார். அவர் ஜெர்மானிய-யூத பூர்வீகக் குடும்பத்தில் பிறந்த ஓர் நான்காம் தலைமுறை அமெரிக்கர். அவரது வளர்ப்பு, நியூ யார்க்கின் மிக வசதிவாய்ந்த, ஜனரஞ்சகமான புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றான வெஸ்ச்செஸ்டரிலும்; அவரது படிப்பு, முழு மதச்சார்பின்மையான அமெரிக்கக் கல்வி பயிற்றுவிக்கும் உள்ளூர் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் அமைந்தன. எப்பொழுதுமே சராசரிக்குக் கூடுதலானதொரு மாணவியாகத் திகழ்ந்த அவர், விரைவில் ஓர் பேரார்வமுள்ள புத்திஜீவியாகவும், தாகமடங்காத புத்தகப்பிரியராகவும் உருவெடுத்தார். புத்தகமும் கையுமாக இருந்த அவர், தனது பள்ளிக்கூடப் பாடங்களின் தேவைக்கு வெகு அப்பால் வாசிப்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டார். பருவம் எய்தியபொழுது அவர் அனைத்துவித சில்லரைக் கேலிக் கூத்துகளையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு,  மிகுந்த  கவன உள்ளம் படைத்தவராக மாறினார். இது  ஓர் அழகான, கவர்ச்சியான யுவதியினிடத்தில் மிக அரிதாகவே காணப்படும் பண்பு ஆகும்.

அவரது முக்கிய ஆர்வப் பாடங்கள்: சமயம், சித்தாந்தம், சரித்திரம், மனிதவியல், சமூகவியல், உளவியல் மற்றும் உயிரியல். அவருக்கு  பள்ளிக்கூட மற்றும் உள்ளூர் சமூகப் பொது நூலகங்களும், பிறகு நியூ யார்க் பொது நூலகமும் இரண்டாம் இல்லமாக விளங்கலாயின.மரியம் 1952 -ம் ஆண்டு கோடைகாலத்தில் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்று நியூ யார்க் பல்கலையில் நுழைவு பெற்றார். அங்கே ஓர் பொதுவான தாராள-கலைத்துறைப் பாடத்தை எடுத்துப் படித்தார். பல்கலைப் படிப்பின் போது, 1953 -ல் மோசமாக நோய்வாய்ப்பட்டார். நோய் தொடர்ந்து மேலும் மோசமடையவே, கல்லூரிப் படிப்பை இரண்டு வருடம் கழித்து - பட்டம் எதுவும் பெறாமலேயே - நிறுத்த வேண்டியதாயிற்று. இரண்டு வருடங்களாக (1957-1959) பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பிறகே தனக்குள்ள எழுத்தாற்றலை கண்டுகொண்டார்.

அல்லாமா முஹம்மது அஸதின் இரண்டு நூல்கள் - அவரது சுயசரிதைத் தகவல்கள் அடங்கிய மக்காவுக்குச் செல்லும்  பாதை மற்றும் நாற்சந்தியில் இஸ்லாம் ஆகியன - மரியமிற்கு இஸ்லாத்தின் பால்  ஆர்வத்தீயை மூட்டியது. பின்னர், முஸ்லிம் நாடுகளில் சில பிரபல முஸ்லிம்களுடன் கடிதத் தொடர்பு கொண்ட பிறகும்; நியூ யார்க்கில் மதம் மாறிய சில முஸ்லிம்களுடன் நெருங்கிய நட்புறவு ஏற்படுத்திக்கொண்ட பிறகும், அவர் இஸ்லாத்தைத் தழுவினார். நியூ யார்க்கில் புரூக்கிலினிலுள்ள இஸ்லாமியப் பிரச்சாரகத்தில் ஷெய்கு தாவூத் அஹ்மது ஃபைசலின் கரங்களில் இஸ்லாத்தைத் தழுவிய மார்கரட் மார்கஸுக்கு தாவூத், மரியம் ஜமீலா எனப் பெயர் சூட்டினார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள முஸ்லிம்களுடன் நீண்ட காலமாக கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டபோதும்; வாசிப்புச் செய்தும், ஆங்கிலத்தில் வெளிவந்த முஸ்லிம் இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதி வந்தபோதும் அவருக்கு மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதியின் எழுத்தாக்கங்கள் அறிமுகமாயின. எனவே, 1960 -ம் ஆண்டு டிசம்பர் தொட்டு, அவர் மௌலானாவுடனும் தொடர்ந்து கடிதப் பரிமாற்றம் செய்து வந்தார். 1962 -ம் ஆண்டு மாரி காலத்தில், மௌலானா அவர்கள் மரியம் ஜமீலாவை பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து வந்து லாஹூரில் தனது குடும்பத்தில் ஒருவராக வாழ வரவேற்று அழைப்புக் கொடுத்தார். அழைப்பை ஏற்று குடிபெயர்ந்து வந்த மரியம் ஜமீலா, ஒரு வருடம் கழித்து முஹம்மது யூசுஃப் கானை - ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒரு முழு நேர ஊழியர் - மனந்தார். இவரே பின்னர், மரியமின் நூல்கள் அனைத்திற்கும் வெளியீட்டாளரானார். அதைத் தொடர்ந்து மரியம் நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி தனது மக்களுடனும், சக மனைவியுடனும் (சக்காலத்தியாருடனும்) மாமனாரது ஒரு பெரிய, கூட்டுக் குடும்ப வீட்டில் வசித்து வருகிறார்.

மரியம் நாத்திகம் மற்றும் பொருளாயதத்தின் அனைத்து வித பழைய, புதிய வெளிப்பாடுகளின் மீதும் ஆழ்ந்த வெறுப்புக் கொண்டுள்ளார். சம்பூரணமான, நிலையான,  பரலோக அறங்களின் பால் தனக்குள்ள தீராத் தேடுதலிற்கு விடையாக இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கிறார். அதுவே, வாழ்வுக்கு (மற்றும் சாவுக்கு) அர்த்தமும் திசையும் நோக்கமும் மதிப்பும் வழங்கும் இறுதி மெய்மை  குறித்த - உணர்வு மற்றும் அறிவு ரீதியில் -  மிக திருப்திகரமான  விளக்கம் என்கிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய மர்யம் ஜமீலா



அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன்,மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார்.அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும்,இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத்.

மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திப்போம்.

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இஸ்லாத்தை ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.



தபூக் கிளையில் சகோ.திவாகரன் இஸ்லாத்தை ஏற்றார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 3-11-2011 அன்று தபூக் ஆஸ்ட்ரா விவசாய பண்னையில் பணிபுரிந்துவரும் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் குருநகரை சேர்ந்த சகோ.திவாகரன் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும் தனது பெயரை அப்துல் ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டார்க்ள. கிளையின் சார்பில் அவருக்கு இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

சகோ.திவாகரன் இஸ்லாத்தை ஏற்றார்



21-08-2009 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹதியா கிளையில் திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்களம் 51-மனக்கரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்ற சகோதரர் அமீர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார் அல்லாஹு அக்பர்.

இஸ்லாத்தை தழுவிய சுந்தர் ராஜ்



அல்லாஹ்வின் மார்க்கத்தில் அலை அலையாய் மக்கள் இணையும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நாள்தோறும் பெருகி வருவதன் தொடரில் ஒன்றாய் கடந்த 13.07.07 வெள்ளியன்று JT மர்கஸில், துபையில் பணியாற்றும் இலங்கை கட்டுநாயக பகுதியை சேர்ந்த, புத்த மத தாய்க்கும் கிருஸ்தவ மத தந்தைக்கும் பிறந்த ''சுரங்கா' என்ற சிங்கள சகோதரர் இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தில் முஹம்மது ரிஸான் என்ற பெயரோடு தன்னை இணைத்துக் கொண்டார், அல்ஹம்துலில்லாஹ்.

எத்தனையோ இயக்கங்கள் இருக்க தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதன் வெளிப்பாடே கடந்த 4 வாரங்களில் JT மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற 3 வது சகோதரர் இவர் என்ற நிஜம்.
பிறந்து வளர்ந்த மதங்களை துறந்து, குர்ஆன் ஹதீஸை விளங்கி மார்க்கத்தை ஏற்கும் இம்மக்களிடமிருந்து இஸ்லாத்திற்குள்ளேயே தன்னை மாற்றிக் கொள்ள மறுக்கும் மத்ஹபு மற்றும் தர்காவாதிகள் பாடம் கற்க வேண்டும் என்ற இலங்கை மவ்லவி.
முஹம்மது நாசர் அவர்களின் கூற்று இந்நிகழ்வின் சிந்திக்கத் தூண்டும் சிறப்பம்சங்களில் ஒன்றாய் அமைந்தது.

இஸ்லாத்திற்கு மாறும் மாற்றுமத சகோதரர்



கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்தில் இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்துவ குடும்பம்
அவர்கள் அனைவரும் அடிப்படை இஸ்லாத்தை தெரிந்து கொள்ள ஏற்பாடு!
புகைப்படங்களுடன் செய்தி...கடந்த 05-01- 2007 அன்று பெங்களூரில் கிருத்துவ மதத்தைச் சேர்ந்த சகோதரர் அருன், அவரது மனைவி நளினி மற்றும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளுடன் கர்நாடக தவ்ஹித் ஜமாத் நடத்தும் இஸ்லாமிக் தஃவா மையத்தை அணுகி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்ததின் அடிப்படையில் . அவர்கள் ஐந்து பேரும் சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் தங்களை இனைத்துக் கொண்டனர்.

இஸ்லாத்தை தழுவிய கிறிஸ்துவ குடும்பம்



கடந்த 17.07.2009 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் துபை ஜே.டி. மர்கஸில் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்கான தர்பியா நிகழ்ச்சியின் போது, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகோ.முத்துகிருஷ்ணன் என்பவர் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொள்ள முன் வந்து, ஜே.டி. நிர்வாகிகள் முன்னிலையில் அமீரக பேச்சாளர் சகோ. பேரணாம்பட் ஜாகிர் அவர்கள் அச்சகோதரருக்கு ஷஹாதா கலிமாசொல்லிக் கொடுக்க ஷஹாதத் கூறி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

மேலும் தன்னுடைய பெயரை முத்து ஃபரீத் எனவும் சூட்டிக் கொண்டார். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

துபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய கிருஷ்ணன்



அல்லாஹு அக்பர் கடநத் 23-06-2010 வெள்ளிக்கிழமை அன்று நடந்த பேச்சு பயிற்சி முகாமில் , விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுமதசகோதரர் ராஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் . சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளக்கி கூறி , கலிமா சொல்லிகொடுத்தார் .

தன்னுடைய பெயரை ராஜா முஹம்மதுஎன்று மாற்றிக்கொண்டார். அவர் தான் அனுபவத்தை கூறும் போது, ” கடவுளை வணங்கும் முறை தன்னுள்ளத்தை ஈர்த்ததாக கூறினார் .

அவருக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் , மற்றும் தொழுகை நூல் ஒன்றையும் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பரிசாக வழங்கினார்கள்.அல்லாஹு அக்பர்.

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய ராஜா



கடந்த 10-06-10 அன்று வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் .

இவருக்கு சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் ஏகத்துவ கலிமாவை கற்றுக் கொடுத்தார்கள். பிறது தனது பெயரை அப்துல்லாஹ்( இறைவனின் அடிமை ) என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய சந்தானம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் 17.06.11 வெள்ளிக்கிழமை அன்று பீனா என்கின்ற சகோதரி இஸ்லாத்தை தன வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை பினா என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

தஞ்சை வடக்கில் இஸ்லாத்தை தழுவிய பீனா.



அபுதாபியில் டெக்னீஷியனாக பணியாற்றும் தூத்துக்குடியைச் சார்ந்த சேர்மராஜ் என்ற சகோதரர் துபாயில் 03.09.2010 அன்று நடைபெற்ற தமுமுக-வின் அமீரக பொதுக் குழுவில் கலந்துக் கொண்டு இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவருக்கு குணங்குடி அமீர் சுல்தான் கலிமா சொல்லிக் கொடுத்து அப்துல்லாஹ் என்ற அவரது புதிய பெயரையும் அறிவித்தார். மமக-வின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து மேற்கொண்டு அவருக்கு தேவையான கடவுச் சீட்டில் சட்டரீதியான பெயர் மாற்றம் உட்பட்ட உதவிகளை தமுமுக செய்யும் என அறிவித்தனர்.

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

இஸ்லாத்தை தழுவிய சேர்மராஜ்



இஸ்லாம் தனிமனிதச் சொத்தல்ல

அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர் முஹம்மது நசீர் அவர்கள், தான் இஸ்லாத்தில் இணைந்த இனிய செய்தியை நமது சிற்றிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


இலங்கையின் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வசித்துவரும் கிருஸ்துவ மதத்தில் நல்ல ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த நான், விவரமறிந்த நாள் முதல் அம்மதத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கடவுள் பக்தியுடனும் வாழ்ந்து கொண்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்து, சரிந்து விட்டதால், வேலை தேடி வெளிநாடு செல்லும் நிர்பந்தம் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட போது, உலகின் பல நாடுகளும் இலங்கை குடி மக்கள் சென்று வந்தார்கள். நானும் வெளிநாடு சென்று வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முனைந்த போது, சவூதி அரபியாவிற்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது சவூதி வந்து சுமார் 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.




இங்கு வருவதற்கு முன்பு என் உள்ளத்தில் இனம் புரியாத அச்சம் நிறைந்திருந்தது. காரணம் நூற்றுக்கு நூறு சதவீதம் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டிற்கு செல்கிறேன். நான் ஒரு கிருஸ்துவன் என்பதால் இஸ்லாம் பற்றிய பல செய்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். அரபு நாட்டில் வாழ்ந்த கிருஸ்தவர்களை மதமாற்றம் செய்து விட்டார்கள், நம்மையும் அது போன்று மதம் மாறும் படி நிர்பந்தம் செய்வார்களோ, அவ்வாறு செய்தால் என்ன செய்வது, எவ்வாறு எனது மதக் கோட்பாட்டில் நிலைத்திருப்பது என்பன போன்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன. மேலும் நான் ஒரு மாற்றுமதத்தைச் சார்ந்தவன் என்பதால் எனக்கு என்ன வேலை கொடுப்பார்கள், நான் ஒரு பட்டதாரியாக இருப்பதால் அதற்கு தகுந்த வேலையினைத் தருவார்களா? அல்லது கடினமான வேலையைக் கொடுத்து அலட்சியம் செய்து விடுவார்களா? என்னை எவ்வாறு நடத்துவார்கள் போன்ற பயமும் என்னுள் இருந்தது.


ஆனால் இங்கு வந்த சில மாதங்களிலேயே உண்மை புரிய ஆரம்பித்துவிட்டது. நான் கற்பனை செய்து, பயந்து கொண்டிருந்தது போன்று எதுவும் நடை பெறவில்லை. இங்குள்ள சூழ்நிலைகளையும், மொழியினையும் நான் அறிந்து கொள்ளும் வரை, சாதாரண வேலையைக் கொடுத்திருந்தார்கள். இங்குள்ள சூழ்நிலைகளையும், மொழியினையும் ஒரளவு புரிந்து கொண்டப் பிறகு நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் அவசியப்படும் உணவுத் தேவையை நிர்ணயம் செய்யும் பிரிவுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். எனக்குக் கீழ் பல முஸ்லிம்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் முஸ்லிம் நோயாளிகளுக்கு தேவைப்படும் உணவினைத்தான் நிர்ணயம் செய்கிறேன். இதற்கு எனது மதம் எந்த விதத்திலும் ஒரு தடையாக இருந்ததில்லை. சுமார் ஏழு வருங்டகளுக்கு மேல் இதே நிலையில் இருந்து விட்டேன். மூன்று முறை விடுமுறையில் ஊர் சென்று வந்துள்ளேன். இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தில் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் நிர்பந்தம் செய்ய வில்லை. நான் மாற்று மதத்தைச் சார்ந்தவன் என்பதால் என்னுடன் யாரும் கடுமையும் காட்ட வில்லை.


எனினும் என்னுடன் இருந்த இஸ்லாமியச் சகோதரர்கள் குறிப்பாக இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் எனக்கு இஸ்லாத்தைப்பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் இடையிடையே கூறுவார்கள். நான் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் கூறுதவற்கு எந்தவித முக்கித்துவமும் கொடுக்கவில்லை. அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டாலும் அதற்காக வருத்தப்படவும் இல்லை, சடைந்து போகவும் இல்லை. அவர்கள் சில நேரங்களில் இஸ்லாமிய நூட்களையும் தங்களது செலவில் வாங்கிக் கொண்டுவந்து எனக்குக் கொடுப்பார்கள். யாரும் அறியாத விதத்தில் தனிமையில் அமர்ந்து இந்தப் புத்தகங்களில் என்னதான் உள்ளது என்று அறிந்து கொள்வதற்காக படிக்க ஆரம்பித்தேன்.


எனது கிருஸ்துவ மதம்தான் சரியானது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இது நாள் வரை வாழ்ந்துவிட்ட எனது வாழ்வில் இந்தப் புத்தகங்கள் சிறிய ஊசலாட்டத்தை ஏற்படுத்த ஆரம்பித்து, எனது கிருஸ்துவக் கொள்கையை ஆட்டம் காணச் செய்துவிட்டது. நான் இருக்கும் கிருஸ்துவக் கொள்கையை திரும்பிப்பார்க்க வேண்டும் என்ற சிந்தனையைத் தோற்றுவித்தது.


மேலும் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் என்னுள் ஏற்பட்டது. இதனை வெளிப்படையாக யாரிடமும் சொல்வதற்கு தயங்கிக் கொண்டிருந்த போது, என் சவூதி நண்பர்கள் இதனைக் குறிப்பால் உணர்ந்து, மேலும் நான் இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்ள பல புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, மென்மேலும் இஸ்லாம் பற்றி அறிவதற்கு ஊக்கம் அளித்தார்கள்.


இஸ்லாம் குறித்த பல நூட்களைப் படித்த நான், இஸ்லாம் போதிக்கும் அதன் தூய கொள்கையால் அதன் பால் ஈர்க்கப்பட்டேன். அதன் பெயரே ஒரு சிறப்பு வாய்ந்ததாக இருப்பதை அறிந்து கொண்டேன். காரணம் தற்போதுள்ள மதங்கள் அனைத்தும் ஒரு தனிப்பட்ட நபரின், அல்லது இயக்கத்தின், அல்லது நாட்டின் பெயரிலேயே ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. கிருஸ்துவ மதம் என்பது ஏசு கிருஸ்து மதம் என்றே அழைக்கப்படுகிறது, அது போல், இலங்கையில் அதிக மக்களால் பின்பற்றப்படும் புத்த மதம் புத்தரின் பெயரால் துவக்கப்பட்டுள்ளது. இது போல்தான் அனைத்து மதங்களும். ஆனால், இஸ்லாம் என்பது எந்த தனிமனிதரின் பெயரையும் குறிக்கக் கூடியதல்ல.


தனிமனிதரின், தனி இயக்கத்தின், தனிநாட்டின் பெயர்களைக் கடந்து அனைவருக்கும், அனைத்து இயக்கத்தினருக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் சொந்தமானது, பொதுவானது, எங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என உரிமை கொண்டாட அது ஒரு தனிமனிதச் சொத்துமல்ல என்று இன்றுவரை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இஸ்லாத்தை போதித்த தூதுவர்களில் இறுதியானவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் இந்த மதம் அவருக்கும் சொந்தமானதல்ல, இந்தத் தூதுவர்களை அனுப்பிய அல்லாஹ், உலக மக்கள் அனைவரையும் நேர் வழிப்படுத்த தந்த அருள் மிக்க மதம்தான் இஸ்லாம் என்பதைப்புரிந்து கொண்டேன்.


மற்ற எல்லா மதங்களைப் போல் அல்லாமல் கடவுள் கொள்கையில் சிறந்து விளங்கும் இஸ்லாம் மனித இயற்கையோடு ஒட்டிப்போகும் உயர்ந்த கோட்பாடுகளை கொண்டு விளங்குகிறது. பின்பற்றப் பட முடியாத வரட்டுத் தத்துவங்களை விட்டும் வெகுதூரத்தில் இருக்கிறது. எனவே, இந்த இஸ்லாம், மனிதனைப்படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த மார்க்கம் என்பதை உணர்வுப் பூர்வமாக புரிந்து, நம்மை செம்மைபடுத்திக் கொள்ள சிறந்த மார்க்கம் இது தான் என்பபைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் என் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முன் வந்த போது, நான் பணி செய்யும் நிறுவனத்தில் என்னைப்போன்றே இஸ்லாமியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாத்தைத் தழுவிய இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற ஊரைச் சார்ந்த சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் வந்து மனப்பூர்வமாக இந்த புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.


அல்ஹம்து லில்லாஹ். (எனக்கு நேர் வழிகாட்டிய அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும் உண்டாகட்டும்.) நான் நேர் வழி பெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நற்கூலிகள் நிறைய வழங்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர்