வரதட்சணைக்கொடுமை-ஆக்கம்-இ.அப்துல்ஹமீது. நாட்டில் ஏராளமான குற்றங்கள் நாள் தோரும் நடக்கிறது . கொலை,கொள்ளை,பாலியல் வன்முறை,பாலியல்சீண்டல்,வழிப்பறி,திருட்டு,மோசடி,மது,விபச்சாரம்,ஆள்கடத்தல்,கள்ளக்காதல்,செயின்பறித்தல் என்று சொல்லிக் கொண்டேபோகலாம். எல்லா குற்றச்செயல்களும் அனைவராலும் குற்றம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வரதட்சணை என்ற குற்றம் பெண்களுக்கு எதிரான கடுமையான தாக்குதலை ஏற்படுகிறது .சமுதாயத்திலும் அதிக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது . ஆனால் வரதட்சணை என்ற குற்றத்தை ஒரு குற்றமாக பெரும்பாலும் யாரும் கருதுவது கிடையாது . வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குறிய குற்றம் என்று சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் சட்டத்திற்கு பயப்படாமல் வாழ்க்கையில் ஒரு நடைமுறையாகவே வரதட்சணை மாறிவிட்டது . இதற்கு காரணம் சட்டங்களை இயற்றுகின்றவர்களில் இருந்து நடைமுறைப்படுத்த, சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே இந்த குற்றத்தை செய்பவர்களாக இருக்கும் நிலை காணப்படுகிறது. நீதிபதிகள் கூட இதில் அடக்கம். இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும் . வரதட்சணை ஒரு குற்றச்செயல், வரதட்சணை அவமானம் என்ற குற்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் . சமீபத்தில் ஹெல்மட் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அவர்கள் கட்டாயமாக ஹெல்மட் அனைவரும் அநிய வேண்டும் .இல்லை என்றால் வண்டியையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்து ஹெல்மட் வாங்கி வந்து காட்டியபிறகு விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு அறிஞர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டது. ஏற்கனவே ஹெல்மட் தொடர்பாக சட்டங்கள் இருக்கும் நிலையில் இதுபோன்ற உத்தரவு சட்டத்தை மீறிய செயல் என்று முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் வெளிப்படையாகவே தொலைக்காட்சி பேட்டியில் விமர்சனம் செய்தார். மக்கள் நலன் கருதி இது போன்ற உத்தரவுகள் அவசியம் என்று பொது நோக்கர்கள் ஆதரவு தெரிவிக்க தவரவில்லை. பெரும்பாலான மக்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு பயந்து ஹெல்மெட் வாங்க அலைமோதியதைப் பார்க்க முடிந்தது . மக்கள் ஒரு சட்டத்தை மதிக்கவில்லை என்றால் புதிய உத்தரவு மூலம் கடுமையான கட்டளை போட முடியும் ,அந்தக் கட்டளை மூலம் பலன் கிடைக்கிறது என்று இதன் முலம் நிரூபணம் ஆகிறது. வரதட்சணை சம்பந்தப்பட்ட சட்டத்தை யாரும் மதிக்காத நிலையில், வரதட்சணை வாங்கினால் அவர்களின் சொத்து பறிக்கப்படும் என்ற உத்தரவுப்பிறப்பிக்க எந்த நீதிபதியும் முன்வரவில்லை. சொத்து பறிக்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுமேயானால் வரதட்சணை பெரிய அளவிற்கு ஒழியும் . ஹெல்மெட் உத்தரவு அதற்கு உதாரணம். திருமண நடைமுறையில் மதக்கலாச்சாரத்திற்கு முக்கிய இடம் உண்டு . எங்கள் மத வழக்கம் இது என்று எல்லா மதத்தினரும் சொல்ல கேட்போம். உண்மையில் பெரும்பாலான மதங்கள் வரதட்சணைக்கு எதிரான நிலையில் இருப்பதை ஆராய்ந்துப்பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது . இந்தியாவில் பெரிய மதம் இந்து மதம்.இது பல்வேறு சிறிய மதங்களின் கூட்டு மதமாக இருப்பதால் பெரிய மதமாக கருத்தில் கொள்ளப்படுகிறது. அதாவது பல்வேறு சாதிகளின் கூட்டமைப்பு சிறிய மதங்கள் என்றால், பல சிறிய மதங்களின் கூட்டமைப்பு இந்து மதம். பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான சமயமே இந்து மதம் என்று இந்துமத அறிஞர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். இந்து மதத்தின் சமய நூல் ஒன்றில் காணப்படும் வரிகளை கவனியுங்கள் . ஆசுரவிவாகம் அதன் கருத்து ஜ்ஞாதிப் யோத்ரவிணம் தத்வா கன்யாயாஸ்சைவ சக்தித; கன்யாதானம் துஸ்வாச்சந்தி யாதாஸுரோதர்ம உச்யதே (யாக்ஞவல்கியர்) பொருள்:மனப்பெண்ணின் பொருப்பாளர்களுக்குப் பணம் கொடுத்து கன்னியைப் பெற்றுக்கொள்ளுதல். இந்து மதத்தில் ஆசுரவிவாகம் என்ற முறையில் மனப்பெண்ணின் பொருப்பாளர்களுக்குப் பணம் கொடுத்துதான் திருமணம் செய்து இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது . அப்படியானால் பெண்ணின் பொருப்பாளர்களிடம் பணம் வாங்கும் நடைமுறை எப்போது வந்தது ? இந்து மதம் பல்வேறு சிறிய மதங்களின் கூட்டமைப்பு என்று அறிந்தோம். வரதட்சணை வாங்கும் பழக்கம் எப்போது ஆரம்பமானது என்பதற்கு தெளிவான சான்றுகளை காண முடியவில்லை .மாறாக இந்துத் திருமண முறைகளை இந்து வேத நூல்களில் காணமுடிகிறது இந்துத்திருமண முறைகள் . 1 வேதம் ஓதுகிறவனை அழைத்து, கன்னிகையைத் தானம் செய்வது பிராம விவாகம். 2 யாகம் செய்யும்போது தனக்கு உதவியாளாக இருப்பவனுக்குத் தன் பெண்ணைத் தருவது தெய்வ விவாகம். 3 யாகம் செய்யும் செலவுக்காக ஒரு பசு அல்லது இரண்டு பசு வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்து கொடுப்பது ஆருஷ விவாகம். 4 ஒரு பையனுக்கு ஒரு பெண்ணைத் தந்து தருமங்களைச் செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுப்பது பிரஜாபத்யம். 5 பெண்ணின் தந்தை கேட்கும் தொகைதந்து பெண்ணுக்கு நகைபோட்டு வாங்கிச் செய்து கொள்வது ஆசுர விவாகம். 6 ஆணும் பெண்ணும் விரும்பி, உறவு கொண்டு, தாங்களே செய்து கொள்வது காந்தருவ விவாகம். 7 உடல் வலுவால் உறவினர்களைத் தாக்கிப் பெண்ணைத் தூக்கிச் சென்று விவாகம் செய்வது ராட்சச விவாகம். 8 தூங்குபவளையோ, குடியினால் மயங்கியிருப்பவளையோ, பித்துப் பிடித்தவளையோ வன்கலவி செய்து விவாகம் செய்வது பைசாச விவாகம் என்கிறது மனுஸ்மிருதி. இந்த முறைகளில் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்குவது பற்றி நேரடியான குறிப்புகள் இல்லை. மாறாக ஆசுரவிவாகத்தில் பெண்ணின் தந்தை கேட்கும் தொகைதந்து பெண்ணுக்கு நகைபோட்டு திருமணம் செய்யும் முறை காணமுடிகிறது வரதட்சணை என்ற கொடுமை எல்லா மதத்தவரிடமும் இருப்பது போல் இஸ்லாமிய மக்களிடமும் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடியும் . இஸ்லாமிய மக்களின் இந்தப் பழக்கம் இஸ்லாமிய மார்க்க போதனையில் இல்லை . இஸ்லாமிய மார்க்கத்தில் ஓர்இறை கொள்கையின் காரணமாக ஈர்க்கப்பட்டு முஸ்லீமாக மாறிய மக்கள் அவர்களின் திருமண மாதிரியான நிகழ்ச்சிகளில் அவர்கள் ஏற்கனவே இருந்த அல்லது பழக்கப்பட்டிருந்த மத நம்பிக்கையின் அடிப்படையில் நடவடிக்கையை அமைத்திருப்பதை பார்க்க முடியும் . அந்த வகையில் வரதட்சணை இஸ்லாமிய மக்களின் திருமணங்களிலும் நடைமுறையில் இருக்கிறது . உண்மையில் இஸ்லாம் வரதட்சணைக்கு எதிரான மார்க்கம் என்பதை அதன் வேத நூலான திருக்குர்ஆனிலும்,ஹதிஸ் என்று அழைக்கப்படும் நபிகள் நாயகத்தின் வழிகாட்டும் நூலிலும் காண முடியும் . பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! ... திருக்குர்ஆன் 4:4 ... நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை)மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார். திருக்குர்ஆன் 5:5 மணக்கொடை என்ற மஹரை மணப்பெண்ணுக்கு கொடுத்தப்பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும் என்று மேற்கோள்காட்டிய சான்றுகளை போல ஏராளமான சான்றுகளை இஸ்லாமிய போதனைகளில் பார்க்க முடியும் . இவ்வளவு தெளிவான போதனைகளை பின்பற்றி வரதட்சணை வாங்கும் நடைமுறையை விட்டு விட்டு மணக்கொடை கொடுத்து திருமணம் செய்ய முஸ்லீம்கள் முன் வர வேண்டும் . அப்போது சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுவதுடன் மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக அமையும் . கிருஸ்தவ மதத்தில் வரதட்சணையின் கொடுமையின் அளவை பற்றி தெரிந்து கொள்ள வரதட்சணை ஒழிக என்ற தலைப்பில் திருமதி சத்யா சுதிர் அவர்கள் ஒரு நாளேட்டுக்குஎழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம் . வரதட்சணை ஒழிக என்ற தலைப்பில் திருமதி சத்யா சுதிர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதோ,,,. வரதட்சணை ஒழிக! திருமண நிகழ்ச்சிக்கு 5000 பேர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களில் 4999 பேர் சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு, மணமக்களைப் பற்றி கதையளந்துவிட்டு, மொய்யெழுதிவிட்டுக் கலைந்து விடுவார்கள். இதற்குப் பதிலாக ஒரு 100 பேரை அழைத்து, அவர்கள் மணமக்களை மனமார வாழ்த்தினால் போதுமானது. நான் சார்ந்திருக்கும் சாதியை எண்ணிப் பெருமிதம் அடைபவள் நான். பாளையங்கோட்டை மற்றும் கன்னியாகுமரியில் தான் எனது சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். பனையேறும் நாடார்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள். இன்று அந்தத் தலைமுறையில் பலர் டாக்டர்களாகவும், என்ஜினியர்களாகவும் உள்ளனர். இவர்கள் தான் சி.எஸ்.ஐ. திருச்சபையை நிர்வகித்து வருகின்றனர். பொதுவாக ஒரு சமுதாயத்தில் வாழ்க்கை மூன்று கூறுகளைக் கொண்டது. பிறப்பு, திருமணம், மரணம் ஆகியவை தான் அந்த மூன்று கூறுகள். வாழ்க்கையின் இந்த ஒவ்வொரு கூறுக்கும் நிகழ்வுக்கும், அதாவது பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக சடங்கு, சம்பிரதாயங்கள் உண்டு. எனது சிறு வயதில் நான் அவற்றில் கலந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் நான் வளர்ந்ததும் இந்தப் பெருமை என்னிடத்திலிருந்து விடைபெற்று, வெட்கமும் வேதனையும் என்னிடம் குடிகொண்டு விட்டது. திருமணம் என்று வந்ததும் மாப்பிள்ளை தேடுவதும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் பறிப்பதும் தான் நடக்கின்றது. அதாவது ஒரு பெண் பருவமானதும் சிறந்த மாப்பிள்ளையைத் தேடும் படலம் பெண் வீட்டில் துவங்கிவிடுகின்றது. மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டிலிருந்து பறிக்கும் வேலையும் துவங்கிவிடுகின்றனர். கடவுளால் அளிக்கப்பட்ட புனிதத் திருமணம், பேரம் பேசப்படுகின்ற கேடுகெட்ட வியாபாரமாக மாறிவிட்டது. M.B.B.S என்றால் அந்த மாப்பிள்ளையின் தலைக்கு விலை பத்து லட்சம்! B.A., B.E. என்றால் இருபது லட்சம்! M.A., M.E. என்றால் இதுபோன்ற பட்டதாரிகளுக்கு ஐந்து அல்லது பத்து லட்சம்! இதல்லாமல் நூறு சவரன் நகை, நவீன சொகுசு கார், புதிய வீடு அமைப்பதற்கு ஒரு தொகை, நிலம், புலம், வயல், வாசல், தோட்டம், துறவுகள், தாரைவார்ப்புகள், திருமணத்தின் செலவுகள் அனைத்தும் பெண்வீட்டின் மீது திணித்து தீர்த்துக் கட்டப்படுகின்றது. ஒரு திருமணம் என்றால் அரை கோடி கரைந்து, காணாமல் போய்விடுகின்றது. இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தலாம். ஆனால் இதுதான் உண்மை நிலையாகும். பெண் குழந்தை பிறந்தது முதல் பெண் வீட்டில் மாப்பிள்ளை பிடிப்பிற்காக சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர். மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டில் பேரம் பேசும் வேளையில் எந்த அளவுக்குப் பிடுங்க முடியமோ அந்த அளவுக்குப் பிடுங்கிக் கொள்கின்றனர். அதிலும் ஒரேயொரு செல்ல மகள் என்றால் போதும். கொப்பில் ஏறிவிடுகின்றனர். என்னுடைய விஷயத்தில் என்னை ஒருவர் பெண் பார்க்க வந்திருந்தார். பையனின் தகப்பனார் பையனை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார். அடக்கமானவன், அமைதியானவன், அறிவாளி, புத்திசாலி, கடவுள் பக்தி கொண்ட பக்திமான், புகழும் பிரபலமும் மிக்க விடுதியுடன் கூடிய ஒரு பள்ளிக்கூடத்தில் படித்தவன் என்று புகழ் மாலைகளைச் சூட்டினார். கை நிறைய சம்பளம் வாங்கும் கண்ணியம் மிக்கவன்; திருச்சபையின் பாடகர் குழுவில் உறுப்பினராக இருக்கிறான் என்றெல்லாம் பையனின் பண்புகளையும், பதவிகளையும் பட்டியலிட்டார். இவ்வளவும் அளந்து விட்டு, "உங்கள் மகளுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?' என்ற பயங்கரவாதக் கேள்வியை என் தந்தையை நோக்கிக் கேட்டார். இப்படி ஒரு கேள்வி மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த மணமகன், இந்தக் கேடுகெட்ட கலாச்சாரத்திற்கு எதிராகப் பொங்கி எழுகின்ற புரட்சி மகன் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். என்னை என் வங்கிக் கணக்குக்காக இல்லாமல், என்னை எனக்காகத் திருமணம் முடிப்பார் என்று எண்ணியிருந்தேன். எனது அந்த எதிர்பார்ப்பிலும் எண்ணத்திலும் மண்ணள்ளிப் போட்டு விட்டார் அந்த மாப்பிள்ளை! எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றும் வகையில், டிரைன் டிக்கெட், வருவதற்கும் போவதற்கும் உரிய போக்குவரத்துச் செலவுகள், மண்டபச் செலவுகள் அத்தனையும் எனது தகப்பனார் தான் செய்ய வேண்டும் என்ற வெட்கம் கெட்ட கோரிக்கையையும் வைத்தார் பக்திமான் மாப்பிள்ளையின் தகப்பனார்! நல்ல வேளையாக எனது தகப்பனார் எனது திருமணத்திற்காக நையா பைசா செலவு செய்கின்ற முடிவில் இல்லை. நான் அந்தப் பையனுக்குச் சமமான படிப்பும் பட்டமும் பெற்றிருந்தேன். என்ன படித்து என்ன செய்வது? அந்த சில நொடிப் பொழுதில் நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன் என்று அவமானமடைந்தேன்; ஆற்றாமை கொண்டேன். இந்த நேரத்தில் பக்திமானான அந்த மாப்பிள்ளையைப் பார்த்தேன். முகத்தில் எந்த ஒரு வெட்கக் கோடுகள், வேதனை ரேகைகள் படியாத, பிரதிபலிக்காத வெறும் கற்சிலையாக, ஆடாமல் அசையாமல் இருந்து கொண்டிருந்தார். அவரது தகப்பனால் வைக்கின்ற ஒவ்வொரு கோரிக்கைக்காகவும் அவரது முகம் கோணவில்லை. அவரது உடல் நாணவில்லை. நல்லவேளை! இந்தக் கற்சிலையை, கையாலாகாததை நான் திருமணம் முடிக்கவில்லை. இவ்வளவு காலமாக என் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளுக்குத் திருமணம் நடப்பதை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். இதுபோன்று என்னுடைய அத்தை மகனுக்கு, கொடுத்த வரதட்சணையை வாங்கிக் கொண்டு திருமணம் முடித்தார். வரதட்சணையின் மதிப்பு உயர, உயர மாப்பிள்ளையின் அந்தஸ்தும் தகுதியும் உயர்கின்றது. இது தான் சமுதாயத்தின் மட்டரகமான அளவுகோலாகும். உங்களுடைய மகள் திருமணத்திற்கு சேமித்து வைத்த மாதிரி, மகன் திருமணத்திற்காக சேமித்து வைக்கவில்லையே? என்று என்னுடைய அத்தையிடம் கேட்டேன். அதற்கு அவர், இதே அளவுக்கு என் மகளுக்குக் கொடுத்துத் தான் திருமணம் முடித்திருக்கின்றேன். நான் அப்படிக் கொடுக்கவில்லை என்றால் என் மகளை யார் திருமணம் முடிப்பார்? என்று என்னிடம் திருப்பிக் கேட்டார். அத்துடன், நான் என் மகனுக்கு எதுவும் வாங்கவில்லை என்றால் பையனுக்கு ஏதோ குறையிருக்கின்றது என்று தவறாக நினைத்துவிடுவார்கள். அதனால் வாங்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். திருச்சபையில் நான் எத்தனையோ சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். ஒரு தடவை கூட வரதட்சணைக்கு எதிரான சொற்பொழிவை நான் கேட்டதே இல்லை. ஒவ்வொரு வாரமும் "ஹோலியர் தேன் தோ....'' என்று பாடுகிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் பெண் பிள்ளைகளுக்குப் பெரிய விலையில் மாப்பிள்ளை தேடுகின்றோம். அல்லது நமது மகன்களுக்குப் பெண் வீட்டாரிடமிருந்து பெரும் பணத்தைக் கொள்ளையடிக்கின்றோம். மாப்பிள்ளையை இந்த விலை கொடுத்து வாங்க முடியாதவர்களின் நிலை என்ன என்று நாம் சிந்தித்துப் பார்த்தோமா? இப்படி ஒரு நிலையை எத்தனை குடும்பங்களில் விரும்புவார்கள்? வெறுக்கத் தான் செய்வார்கள். வரதட்சணை கொடுக்கின்ற, அல்லது வாங்குகின்ற நாம் ஒவ்வொருவரும் பெண் குழந்தையின் சாவுக்குக் காரணமாகவும் பொறுப்பாகவும் ஆகின்றோம் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? ஒவ்வொருவரும் இப்படிப் பெண் குழந்தைகளைக் கொல்வதற்குக் காரணமாக இருந்துவிட்டு மற்றவர்களைப் பழிப்பது எப்படி நியாயமாகும்? கடவுளே! நீங்கள் வருகையளியுங்கள் என்று திருமண நிகழ்ச்சிகளில் பாடல் பாடுகின்றோம். திரை மறைவில் நடக்கின்ற அநியாயங்களை ஏசு பார்த்தால், அவர் ஜெருஸலம் மாதா கோயிலில் செய்தது போன்று, புனித திருமணத்தை வியாபாரமாக்கிய நயவஞ்சகர்களே! என்னுடைய தேவாலயத்தைச் சந்தையாக்கி விட்டீர்கள். இதை விட்டு வெளியே செல்லுங்கள் என்று உங்கள் அனைவரையும் துரத்தி அடித்திருப்பார். என்னுடைய சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்கின்றேன். திருமணத்தையொட்டி நடக்கின்ற நயவஞ்சகங்கள், ஆடம்பரங்கள் தொலைய வேண்டும் என்று விரும்புகின்றேன். திருமண நிகழ்ச்சிக்கு 5000 பேர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களில் 4999 பேர் சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு, மணமக்களைப் பற்றி கதையளந்துவிட்டு, மொய்யெழுதிவிட்டுக் கலைந்து விடுவார்கள். இதற்குப் பதிலாக ஒரு 100 பேரை அழைத்து, அவர்கள் மணமக்களை மனமார வாழ்த்தினால் போதுமானது. சமீபத்தில் வாங்கிய வைர மாலையை, வந்திருக்கும் பெண்களுக்குக் காட்டவும் அவர்கள் பொறாமைப்படவும் தேவையில்லை. மணப்பெண்ணுக்கு 25,000 ரூபாய் செலவில் ஏன் சேலை எடுக்க வேண்டும்? ஒரு தடவை உடுத்திவிட்டு அது அப்படியே அலமாரிக்குள் மடித்து வைக்கப்படுகின்றது. பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்படும் நகைகள் எதற்கு? கனமான நகைகளை கழுத்து, காது, கைகளில் போட்டு கல்யாணப் பந்தலில் பலருக்கும் போட்டுக் காட்டிவிட்டு, திருமணம் முடிந்ததும் வங்கிப் பெட்டகங்களில் வைத்து அவை பூட்டப்படுகின்றன. இதற்குப் பதிலாக நூறு பேர்கள் கலந்து கொண்டு, மணமகள் ஒரு 3000 ரூபாய் அல்லது அதைவிடக் குறைந்த மதிப்பிலான சேலை அணிந்து, சாதாரணமான நகை போட்டுக் கொண்டு, எளிமையான முறையில் திருமணம் நடகக்கின்ற அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன். இவை அத்தனைக்கும் தேவை நான் மாற வேண்டும்! நீங்கள் மாற வேண்டும்! இந்தச் சமுதாயம் மாற வேண்டும். நன்றி ஆன்லைன் பீஜே திருமணம் என்கிற பந்தத்தில் முழுவதும் தியாகம் செய்பவர்கள் பெண்கள் தான் என்றாலும் அதிகமானோர் இதை உணவர்தில்லை. பொதுவாக அனைத்து மக்களும் நியாயம் நீதிக்கு விருப்பமுடையவர்களாக இருப்பார்கள் . தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நீதி,நியாயம் பேசுவது எல்லா மட்டத்திலுள்ள மக்களிடமும் இயற்கையாகவே அமைந்திருப்பதை காண முடிகிறது. தண்ணீருக்காக குழாயடிகளில் சண்டை போடும் பெண்கள் எதற்காக சண்டை போடுகிறார்கள்? அவளுக்கு இரண்டு குடம் எனக்கு ஒரு குடமா? நான் காலையில் இருந்து காத்துக்கிடக்கிறேன். இப்போது வந்தவளுக்கு முதலில் குடுக்கிறான் .இது என்ன நியாயம் ? இதுபோன்ற வார்த்தைகளில் ஆரம்பமாகி பல நேரத்தில் கொச்சையான வார்த்தைகளில் சண்டை முடியும். இது *கொழாயடி சண்டை* என்று மக்களால் அழைக்கப்படுகிறது . கொழாயடி சண்டையை கூர்ந்து கவனித்துப்பார்த்தால் பல நியாயங்கள் புரியும் . பெரிய குடும்பமாக இருப்பதால் இரண்டு குடம் கொடுத்தேன் . அவங்க அம்மாவிற்கு உடம்பு சரியில்லை அதனால் முதலில் தண்ணீர் கொடுத்தேன் என்று தண்ணீர் ஊற்றுபவர் தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்துவார். கொழாயடி முதல் சுப்ரீம்கோர்ட் வரை நீதி நியாயம் பேசுவது அநீதி இழைக்கப்பட்ட அனைவருக்கும் உள்ள உரிமையாக இருக்கிறது . குற்றம் இழைக்கும் மக்களிடம் ஏன் இந்த குற்றத்தை செய்தாய் என்று கேட்டால் அதற்கு அவர் ஒரு நியாயம் சொல்வதை பார்க்க முடியும் . உதாரணமாக திருடனிடம் ஏன் திருடினாய் என்று கேட்டால் பல நியாயங்களை சொல்ல கேற்போம். அம்மாவிற்கு உடம்பு சரிஇல்லை ஆப்ரேசன் செய்யனும் அதனால் திருடினேன். ஸ்கூல் பீஸ் கட்டவேண்டும் அதனால் திருடினேன். குடிக்க பணம் இல்லை கை கால் நடுங்குகிறது அதனால் திருடினேன்.என்று பல்வேறு நியாயங்களை சொல்ல கேட்டிருக்கிறோம். இதுபோன்ற எதாவது சின்ன நியாயத்தையாவது வரதட்சணை வாங்குபவர்கள் சொல்ல முடியுமா? என்றால் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும் . அதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம் . திருமணம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது முதல் பெண்கள் தியாகத்திற்கு தயாராகியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் நடைமுறையில் இருப்பதை பார்க்கலாம். ஒருவர் தனது தேவைக்காக தனது வீட்டில் இருந்து வெளியே சென்றால் அவரது மனநிலையை கவனியுங்கள் . எப்போது வேலை முடியும் எப்போது வீடு செல்வோம் என்று மனம் ஏங்குவதை காணலாம். கோடை விடுமுறைக்காக குளிர் பிரதேசங்களிளுக்கு குதுகுலத்துடன் சுற்றுலா செல்லும் மக்கள் ஓர் இரு நாட்களிளேயே எப்போது வீடு செல்வோம் என்று மனம் ஏங்குவதை அனுபவமுள்ளவர்கள் உணர்திருப்பார்கள். ஒரு பெண் திருமணமான அடுத்த நிகழ்ச்சி மறுவீடு என்று அழைக்கப்படுகிறது . தான் பிறந்தது வளர்ந்த வீடு ஊர் மாவட்டம் மாநிலம் சில நேரத்தில் நாட்டையும் கூட துறந்து விட்டு இடபெயற்சி செய்பவர்கள் பெண்கள் தான் . இந்த நிகழ்வு இயற்கையாக மரபு அடிப்படையில் சாதாரணமாக நடப்பதால் இதில் பெண்களின் தியாகம் மதிக்கப்படுவதில்லை. மறுவீடு சென்ற பெண் தாய்வீட்டுக்கு எப்பாவது வந்து அதிக நாள் தங்கிவிட்டால் பெற்றோர் முகத்தில் கவலை வந்துவிடும் . அந்த அளவிற்கு கணவன் வீட்டுக்கு முழுமையான இடபெயற்சிக்கு தன்னை முறை மனதோடு ஏற்றுக் கொள்கிறார்கள் . இந்த தியாகத்திற்கு காரணம் திருமணம் தான் . கணவன் மனைவி குழந்தைகள் என்ற குடும்பம் அமைவதற்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளும் பெண்களுக்கு ஆண் வரதட்சணை கொடுக்க வேண்டுமா? அல்லது வரதட்சணை வாங்க வேண்டுமா? என்பதை நியாயம் பேசும் அனைவரும் சிந்திக்க வேண்டும் . திருமணம் பந்தத்தில் தாம்பத்யம் முக்கிய பங்கு வகிக்கிறது . கணவன் மனைவி என்ற உரிமையுடன் உறவு கொள்வதை எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாகும். பெண்ணின் உடல் தேவை அவசியமானது என்றாலும் அவசரமானது இல்லை . இதை கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்ப்போம் . விபச்சாரம் என்ற தீமை உலகமெங்கும் நடக்கிறது . இந்த விபச்சாரத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிக பணத்தை பொருளை அக்காரியத்திற்கு செலவு செய்ய பார்த்திருப்போம். ஆயிரம் லட்சம் கோடி என்று தகாத உறவுக்காக செலவு செய்து அதனால் ஏற்படும் துன்பங்களை தானும் அனுபவித்து தன் குடும்பத்தினரையும் கஷ்டபடுத்துவார்கள். இதற்காக நாட்டை இழந்த கதைகளும் உண்டு. விபச்சாரம் என்ற கள்ள உறவிற்கே ஆண் பணம் கொடுக்கிறான்.பெண் பணம் வாங்குகிறாள். இதிலிருந்தே ஆணின் உடல் தேவையின் அவசரமானது என்பது புரிகிறது . கள்ள உறவுக்கே ஆண் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பணம் கொடுக்கும் போது நல்ல உறவுக்கு யார் பணம் கொடுக்க வேண்டும் என்பதை நியாயத்தை விரும்பும் மக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . தாம்பத்தியம் புனிதமானது என்று சொல்லக்கூடிய மக்கள் இந்த நியாயத்தை புரிந்து கொண்டு பெண்ணுக்கு பணம் கொடுத்துதான் திருமணம் செய்ய வேண்டும் . ஆண் பெண் தாம்பத்ய உறவில் ஆணின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கிறது என்றாலும் சந்தோஷம் இருவருக்கும் தான். ஆனால் சந்தோஷம் அடைந்த இருவரின் நிலை சமமானதாய் இல்லை . ஆணிடம் எந்த மாற்றங்களும் இல்லை . ஆனால் பெண்ணிடம் உடல் ரீதியான மாற்றங்களும் மன ரீதியான மாற்றகளும் பல துன்பகளும் ஏற்படுவதை கண்கூடாக பார்க்கிறோம். பொதுவாக மனிதர்களுக்கு உடலில் ஏதாவது கட்டியோ அல்லது வீக்கமோ வந்தால் அதனால் ஏற்படும் துன்பம் மன உளைச்சலை ஏற்படுத்தும் . அதற்காக பெரும்பணம் செலவு செய்தாவது அத்துன்பத்திலிருந்து தன்னை காத்துக் கொள்வார்கள் . கண் மூளை போன்ற முக்கிய உறுப்புகளில் அது இருந்தால் சொத்தைகூட விற்று செலவு செய்வார்கள் . தாம்பத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் உடலில் வாரிசு என்ற பெயரில் முதலில் கட்டி உருவாகிறது . இந்தக் கட்டிதான் நாளடைவில் உறுமாற்றம் ஏற்பட்டு குழந்தையாக மாறுகிறது . கட்டி முதல் குழந்தை வரை பத்து மாதங்கள் பெண்கள் படும் பாடு சொல்லிமாலாது. குழந்தை உண்டாகிய முதல் மூன்று மாதங்கள் குமட்டல் ஏற்பட்டு வாந்தி தலைவலி மயக்கம் போன்ற தொந்தரவு ஏற்படுவதை நேரடியாகப் பார்க்கலாம். வயிற்றுவலி அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற தொல்லைகள் மறைமுகமாக ஏற்படும் . தான் ஆசைபட்ட உணவு இப்போது கிடைத்தாலும் சாப்பிட முடியாது .வாயில் வைத்தாலே வாந்தி வருகிறது . வாந்தி நின்று போன காலத்திலிந்து வயிற்றில் வளரும் சில மாதங்கள் குழந்தைக்கும் சேர்த்து அதிக உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது . ஐந்து ஆறு மாதத்தில் இருந்து குழந்தையை பெற்று எடுக்கும் வரை பெண்ணின் துன்பங்கள் அதிகரித்து கொண்டே போகிறது . நன்றாக உருண்டு பெறண்டு படுத்துத் தூங்கிய பெண்ணால் இப்போது ஒழுங்காக படுக்கக் கூட முடியாமல் தவிக்கும் நிலை . ஏழு மாதத்திற்கு மேல் நடு ராத்திரி வலி தாங்க முடியாமல் தூங்க முடியாமல் அமர்ந்தும் நடந்தும் அழுதும் இரவுகளை கழிக்கும் பெண்ணின் தியாகத்தை நாம் சிந்தித்துப் பார்க்கிறோமா? இரவு படும் துன்பங்கள் குரட்டை விட்டு மெத்தைகளில் புரண்டுக்கொண்டிருக்கும் கணவணுக்கு இடையூறு ஏற்பட்டு விட கூடாது என்று கஷ்டங்களை தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ளும் பெண்களின் மனநிலையை சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா? குழந்தை பேறு ஏற்படும் அந்தக் காலகட்டத்தில் பெண்ணின் அவஸ்தைகளை சிந்தனையில் வைத்து பார்க்க வேண்டாமா? குழந்தை பெறும் போது ஏற்படும் வலி ஆண் வர்க்கம் அனுபத்தில் இல்லாதது . பெண்ணின் பிரசவ வலியின் அளவு 57 Dels. உங்க உடம்பின் 20 எலும்புகள் ஒரே நேரத்தில் உடைந்தால் எவ்வளவு வலி இருக்குமோ அவ்வளவு வலி பிரசவத்தினால் ஏற்படும் . பொதுவாக தங்களுக்கு ஒரு துன்பம் வருகிறது என்று முன் கூட்டியே தெரிந்தால் அதை செய்ய யாரும் முன் வர மாட்டார்கள் .ஒதுங்கி கடந்து சென்று விடுவோம் . ஆனால் பிரசவத்தினால் இவ்வளவு பெரிய துன்பம் வரும் என்று முன் கூட்டீயே தெரிந்தும் அத்துன்பத்தை ஏற்றுக்கொள்ள முன் வரும் பெண்ணின் தியாக உணர்விற்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டாமா? எதனால் இவ்வளவு பெரிய துன்பத்தை முன்வந்து ஏற்றுக் கொள்கிறார்கள் ? தன் கணவன் குறை இல்லா ஆண்மகன் என்ற தகுதியை நிலை நாட்டவும் தன் குடும்பத்தின் வாரிசை பெற்றுத்தர வேண்டுமென்ற கடமையைச் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணமும் தான் . அவர் உள் மனதில் இச்சிந்தனை புதைந்திருக்கும். வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள் . இவ்வளவு பெரிய தியாக சிந்தனை கொண்டவர்கள் பெண்கள் . இப்போது சிந்தித்துப் பாருங்கள் வரதட்சணை ஆண் கொடுக்க வேண்டுமா?வாங்க வேண்டுமா? எது நியாயம் ? பிரசவம் ஆன உடனே தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை மறந்து தன் குழந்தையை பார்த்து பூரிப்படையும் பெண்ணின் அப்பாவிதனமான பாசத்தை மதிக்க வேண்டும் . குழந்தை பிறந்ததோடு அவளது கடமை முடிந்து விடவில்லை . தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் உணவு என்பதை உணர்ந்து உணர்வுபூர்வமாக குழந்தைக்கு பாலூட்டும் கடமையை செய்யும் பெண்ணின் அக்கறையை மதிக்கவேண்டாமா? குழந்தை அழும்போதல்லாம் தன் தூக்கத்தை தியாகம் செய்து அக்குழந்தைக்கு பணிவடை செய்பவர்கள் பெண் தானே. நடுராத்திரி குழந்தை பசிக்காக அழும்போதல்லாம் தன் தூக்கத்தையும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் குழந்தையின் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் பெண் மட்டுமே . பச்சை குழந்தை பசி வயிற்றுவலி காய்ச்சல் போன்ற காரணங்களால் வீல் வீல் என்று அழும் போது குழந்தையின் தேவையை பூர்த்தி செய்து தன் நெஜ்ஜோடு அனைத்து இதமான தூக்கத்தை குழந்தைக்கு கொடுப்பவள் பெண் அல்லவா ? குழந்தையை தந்தை கொஜ்ஜிக்கொண்டிருக்கும் போது மலம் ஜலம் கழித்தால் அதை சுத்தம் செய்ய ஆண்வர்க்கத்திற்கு கடினமான காரியம் . அந்த குழந்தையை வாங்கி கொஜ்சம் கூட முகம் சுழிக்காமல் சுத்தம் செய்பவர்கள் பெண்கள் தானே. இப்படி உங்கள் வாரிசுகளுக்கு பணிவடை செய்யும் பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுக்க வேண்டுமா? அல்லது வரதட்சணை வாங்க வேண்டுமா? எது நியாயம் ? ஏன்டீ புது பெண்ணே இன்னிக்கு என்ன சமையல் செய்து அசத்தபோறே? ஏன்னா உங்க அம்மாவிற்கு என்ன பிடிக்கும் ? அம்மாவிற்கு சாம்பார் தான் பிடிக்கும் . எனக்குத் தான் சாம்பார் வைக்க தெரியாதே! அதனால் என்ன ! ஊர் அறிய உன்னை கல்யாணம் பன்னின்டேன். இப்ப யாருக்கும் தெரியாமல் உனக்கு சாம்பார் செய்ய சொல்லித்தறேன்... இது சாம்பார் மசாலா பொடி விளம்பரம் . உங்க டாய்லட் கிளீனா இருக்கா? நீல நிறம் டாய்லட்டுக்கு .சிவப்பு நிறம் பாத்ரூமிற்கு ...என்று முடியும் பாத்ரூம் கிளீனர் விளம்பரம் . ஒரு பெண் திருமணம் முடிந்து மறுவீடு புகுந்த உடனே அவள் கணவனுடைய வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுகிறாள். மேற்காட்டிய விளம்பரங்கள் அதற்கு சரியான உதாரணம் . மாமனார் மாமியார் முதல் கணவன் வீட்டில் உள்ள அனைவருக்கும் அறிவிக்கப்படாத வேலைக்காரியாக தன்னை மாற்றிக் கொள்கிறாள். பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்கிறது ரசங்கெட்ட பழைய பழமொழி . பழமொழி ரசம் கெட்டதாக இருக்கலாம் .ஆனால் பெண்களுக்கு இதுதான் எழுதப்படாத விதியாகி விட்டது . காலையில் எழுத்து குளித்து விட்டு குடும்பத்தினருக்கு காப்பி டீ போட்டுக் கொடுத்து அடுத்து காலை உணவு தயார் செய்து அடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து அடுத்து கணவனை அலுவலகத்திற்கு அனுப்ப தயார் செய்து அடுத்து மதிய உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவி துணியை துவைத்து காய வைத்து வீட்டை சுத்தம் செய்து பாத்ரூம் டாய்லட் சுத்தம் செய்து அடுத்து மாலை உணவு (ஸ்னாக்ஸ்)தயாரித்து அடுத்து இரவு உணவு தயாரித்து குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்ட பின் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு தூங்க செல்லும்போது போதும் போதும் என்று ஆகிவிடும். குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கவும் கணவனை சந்தோஷப்படுத்தவும் தவரவில்லை. இது பொதுவானது.சில வீடுகளில் வேலைகள் கூடலாம்.குறையலாம். திருமணம் செய்த ஒரேயொரு காரணத்தினால் இவ்வளவு வேலைகளையும் மனமுவந்து செய்து அதில் சந்தோஷம் அடையும் பெண்களிடம் ஆண்கள் வரதட்சணை வாங்குவது நியாயமானதா?இல்லை இல்லை கொடுப்பது தான் நியாயமான காரியம் . வரதட்சணை கொடுமையால் சமுதாயத்தில் ஏராளமான குற்றங்கள் ஏற்படுகிறது . அன்றாடம் செய்தித்தாழ்களில் ஒரு செய்தி பெரும்பாலும் இடம்பெற்றிருக்கும். ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு.இதுதான் அந்த செய்தி. ஸ்டவ் வெடிப்பதில் இளம் பெண் மட்டும் சாவது எப்படி? பெண்ணின் திருமணத்திற்காக வரதட்சணை பேசப்பட்டிருக்கும். திருமண நேரத்திற்குள்ளாக அந்தப்பெண்ணின் பெற்றோரால் முழு வரதட்சணையையும் கொடுக்க முடியாமல் தவிப்பார்கள். முக்கால் வாசியோ அதற்கும் மேலேயோ கொடுத்து விட்டு சிறு தொகை அளவு கடன் சொல்லி திருமணம் நடந்திருக்கும். திருமணம் முடிந்து பெண்ணிடம் தனது தேவையை ஆசைதீர முடித்த ஆண் பாக்கி வைத்த வரதட்சணையை வாங்கி வரச்சொல்லி அனுப்புவான். பெண்ணும் கண்ணீருடன் தாய் வீட்டிற்கு சென்று பாக்கி வரதட்சணையை கேட்பாள். கஷ்டத்தில் இருக்கும் அவர்களால் பணம் புரட்ட முடியாத சூழ்நிலையில் மகளிடம் அவகாசம் கேட்டு சமாதானம் சொல்லி அனுப்புவார்கள். கணவன் வீட்டில் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . வாயில் வந்த வார்த்தைகளால் திட்டுவார்கள். குடும்பமே ஒன்று கூடி பெண்ணை சகட்டு மேணிக்கு அடித்து துன்புறுத்துவார்கள். பெண் இறந்தே விட்டாள். கொலை குற்றத்திலிருந்து தப்பிக்க பெண்ணின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி பக்கத்தில் ஸ்டவ்வையும் வைத்து தீ வைத்து விட்டு ஸ்டவ் வெடித்ததால் செத்துப் போய்விட்டாள் என்று ஒப்பாரி வைப்பார்கள் . சிலதை தவிர பெரும்பாலும் இந்த முறையிலேயே ஸ்டவ் வேடிக்கிறது. வரதட்சணை கொடுமையால் எத்தனை எத்தனை பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். எத்தனை எத்தனை குடும்பம்கள் மன வேதனையில் துன்பப்படுகிறது. பெண்ணைப் பெற்றவர்களுக்கு திருமணம் என்றாலே விழி பிதிங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட காரணம் என்ன? பலரது உயிருக்கும் மானத்திற்கும் உலைவைக்கும் இந்ந வரதட்சணை திருமண முறையை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்த ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் . இல்லையென்றால் பாதிக்கப்பட்டவர்கள் வரதட்சணை சமுதாயத்தை பழிப்பார்கள். பாவம் நம்மை வந்து சேரும். முதிர்கன்னி கூந்தலிழை ஒன்றிரண்டு நரை கண்டு சாம்பல் நிறமாகியிருக்கும் அகத்தைப்போல் முகத்திலொரு வறட்சியின் கடுகடுப்பு வார்த்தைகளில் சில கருத்துப் பிழை வேலைகளிலும் கூட சில தடுமாற்றங்கள் எல்லாமே முகமுற்றல் ஒரு முப்பதுமுப்பத்தைந்தென விரல்விட்டு எண்ணிச் சொல்லும் பெண்ணென்று பிறந்தால் பருவத்தில் பயிர் செய் என்பது உண்மைதானோ... ஆணுக்கு வயது தேவையில்லை... இனி மாப்பிள்ளை வீட்டார் வருவோரெல்லாமே... மனைவியை பறிகொடுத்தவனும்; மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றவனும்; ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு தகப்பனும் கிழவயதை எட்டுபவனும் எல்லாருமே ஐம்பது பவுன், பைக், வீடு, நிலம் என பட்டியலைக் கொடுத்து ஒரு குடும்பத்தின் இதயங்களை மொத்தமாய் கட்டி உடைப்பதற்கு யார் காரணம்? இது இத்தனை நாள் பெண்ணை வீட்டிற்குள் வைத்திருந்ததற்கான தண்டனையா அல்லது அபராதமா? சமூகத்தின் பார்வையில் முதிர்கன்னி என்பவள் ஒரு நோயாளி போலவே காணப்படுகிறாள்... பின்பு அந்த சமூகமே அவளை பரிதாப பார்வைகளை கொஞ்சம் கொஞ்சமாய் வீசி வீசியே அவள் கனவோடு உடலையும் குலைத்துப் போடுகிறது. நெற்றியில் குங்குமமும் கழுத்தில் மஞ்சள் கயிறும் ஏறாமலேயே பாவம் தன்னம்பிக்கையில் பாறாங்கல் விழுந்து தூக்கில் தொங்கிப் போனது எத்தனையோ? சரி அப்பெண்ணிற்கு மாங்கல்யம் கிட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பியதா? - கோபால்தாசன் நன்றி-தினமணி சமுதாயத்தில் முதிர்கன்னிகளின் பரிதாபத்தை மேற்கூறிய கட்டுரை விவரிக்கிறது. முதிர்கன்னிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்? அந்தஸ்து கௌரவம் வரதட்சணை போன்ற காரணங்கள் . மற்ற காரணங்களை விட வரதட்சணை காரணமாகத் தான் முதிர்கன்னிகள் அதிகமாக பாதிப்புக்கு ஆளானவர்கள். இரண்டு பெண் தோழிகள். ஒருத்தி வசதியானவர்.மற்றொருத்தி ஏழை.இரண்டு பேருக்கும் வயது 18 . வசதியான பெண்ணிற்கு பெரும் தொகை வரதட்சணை கொடுத்து திருமணம் நடந்து விட்டது . ஏழை பெண்ணின் பெற்றோர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் தவிப்பார்கள் .நாட்கள் ஓடி விட்டது .வயதும் ஏறிக் கொண்டே செல்கிறது .ஏழ்மை தீர்ந்தபாடில்லை. இப்போது பெண்ணின் வயது 37. இளமையும் போய்விட்டது . ஆதரவான பெற்றோரும் பலகீனமடைந்து விட்டனர். மறுமுனையில் தோழி தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்துகிறாள். அழகும் அறிவும் இருந்தும் வரதட்சணை கொடுக்க முடியாததால் திருமண வாழ்க்கை கனவாகி போய் விட்டது அந்த ஏழை அபலப்பெண்ணிற்கு. இது போன்று நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் தான் முதிர்கன்னிகள். இவர்களின் துன்பத்திற்கு காரணமாக இருப்பது வரதட்சணை மட்டுமே . வரதட்சணையை ஒழித்துக் கட்டினால் தான் இந்த அவலம் மாறும் .வரதட்சணை வாங்க கூடாது என்று உள்ளத்தில் உறுதி மொழி ஏற்க வேண்டும் . சுயமரியாதையோடு வாழ்க்கை நடந்த கூடிய மனிதர்கள் கூட இந்த வரதட்சணையால் பாதிக்கப்பட்டு சுயமரியாதையை இழந்து நடைபிணமாய் வாழக்கூடிய நிலை ஏற்படுகிறது . ஒரு மனிதர் தன் வருமானத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தும் பழக்கம் கொண்டவர். சில நேரத்தில் கஷ்டத்தில் கூட எவரிடத்திலும் கை ஏந்தியதில்லை. கை ஏந்துவது இழுக்கு என்ற கொள்கை உடையவர் . இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது . சந்தோஷம் தான் .ஆனால் ஆண் குழந்தை மோகம்.சரி அடுத்து பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் . சரியாக ஒரு வருட இடைவெளியில் இன்னொரு குழந்தை .ஆண் குழந்தை பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் பிறந்ததோ மீண்டும் பெண் குழந்தை . சரி நம் கையில் ஒன்றும் இல்லை என்ற சமாதானம் .என்றாலும் ஆண் குழந்தை மோகத்தால் மீண்டும் முயற்சி . இந்த முறை கண்டிப்பாக ஆண் குழந்தை தான் என்று எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு அதிர்ச்சி .மீண்டும் பெண் குழந்தை . விரக்தியடைந்தாலும் ஆண் குழந்தை மோகத்தால் மீண்டும் முயற்சி .ஆனால் பிறந்தது மீண்டும் பெண் குழந்தை . கவலையுடன் ஆண் குழந்தை மோகத்திற்கு சமாதி கட்டுகிறார். நான்கு பெண் குழந்தைகளும் நல்ல முறையில் வளர்க்கப்படுகின்றன . இப்போது நான்கு குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக பருவ வயதை அடைகிறது .திருமணம் செய்ய வேண்டும் . மூத்த பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார். தான் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் தன் குழந்தைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கவே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். ஒரு மாப்பிள்ளை முடிவானது. வரதட்சணை தன் தகுதிக்கு மீறி கேட்கிறார்கள் .இருந்தாலும் நல்ல பையனாக இருக்கிறான். கடனே வாங்காத அவன் மகளின் திருமணத்திற்காக கடன்களை வாங்கி திருமணத்தை முடிப்பதற்குள் மிகவும் சிறமப்பட்டுபோனான். இப்போது அடுத்த பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும். குழந்தைகள் அழகும் அறிவும் இருந்தாலும் வரதட்சணை கொடுத்தால் தானே திருமணம் நடக்கும் . மூத்த பெண்ணின் திருமணத்திற்கு வாங்கிய கடனை இன்னும் கொடுக்க முடியவில்லை . என்ன செய்வது? இரண்டாவது பெண்ணிற்கு திருமணம் செய்ய கை ஏந்தக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். எவரித்திலும் கை ஏந்தாத அந்த மனிதர் வரதட்சணை கொடுப்பதற்காக உறவினர்கள் நன்பர்கள் என்று ஒவ்வொருவராக பார்த்து உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். அவனது சுயமரியாதையை இழந்து விட்டான்.அடுத்தவர்களிடம் கை ஏந்தி இரண்டாவது பெண்ணின் திருமணமும் முடிந்தது.கவலையால் அவன் வாழ்க்கையும் முடிந்தது. ஆம் அவன் இறந்தே போனான்.இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் திருமணத்தை எதிர் நோக்கிய நிலையில் ... கணவன் இறந்துபோன நிலையில் இரண்டு குழந்தைகளை திருமண வயதில் வைத்திருக்கும் தாய் செய்வதரியாது தவிக்கிறாள். தனக்கு தெரிந்த நபர்களின் உதவியுடன் வீட்டில் தையல் மிஷின் வாங்கி மகள்களை தையல் தொழிலில் ஈடுபடுத்திக் காலத்தை கழிக்கிறார்கள். தன் பங்கிகிற்கு வீட்டு வேலைக்கு செல்கிறாள் தாய். மூவரும் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகள் திருமணம் நடைபெற்றது . சிலரது வாழ்க்கை இப்படி முடிந்தாலும் பலரது வாழ்க்கை இன்னும் சமுதாய சிக்கலை உருவாக்ககூடியதாக அமையும் . பொருளாதார தேவைக்காக வேலைக்கு செல்லும் ஆதரவற்ற பெண்களின் நிலமை பாதுகாப்பாக இல்லை. காத்திருக்கும் கயவர்களிடம் சிக்கி சீரழியும் நிகழ்வுகள் ஏராளம். சமுதாயத்தில் ஏழை நடுத்தர வர்க்க பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க பணம் வேண்டும் என்ற எண்ணத்திலேயே வேலைக்கு செல்கிறார்கள் . அதில் வெற்றி பெருபவர்கள் மிக சிலர் . பெரும்பாலானவர்கள் காதல் கூடாதநட்பு கள்ளகாதல் போன்ற சமூக மாயையில் வீழ்த்தப்பட்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் . இது போன்று பெண்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கும் காரணிகள் சமுதாயத்தில் ஏராளமாக இருக்கிறது . எல்லா காரணத்திற்கும் அடிப்படையாக இருப்பது வரதட்சணை என்ற கொடிய பழக்கம் மட்டுமே . பெண்களின் வாழ்க்கையையே திசைதிருப்புகிது இந்த வரதட்சணை . பெண்ணின் சந்தோஷத்தையே கேள்விக்குறியாக மாற்றி அமைக்கிறது இந்த வரதட்சணை. பெண்களின் சமூக முக்கியத்துவத்தை கொடுமை வரதட்சணை மாற்றி அமைத்து கொண்டு இருக்கிறது . சமுதாயத்தில் சிசுகொலை பெரிய பிரச்சினையாக இருப்பதை காணலாம் . பெண் குழந்தை பிறந்த உடனேயே கள்ளி பால் கொடுத்து அல்லது நெல் மணிகளை கொடுத்து அல்லது வேறு வழிகளில் கொன்று விடுகின்றனர். அல்லது கருவில் இருக்கும் போதே ஆணா பெண்ணா என்று பார்த்து விட்டு பெண் குழந்தை என்றவுடன் கருவில் வைத்தே கொன்று விடுகின்றனர் . ஏன் பெண் குழந்தைகள் இப்படி அநியாயமகாக கொலை செய்யப்படுகிறார்கள்? என்பதை கவனத்தீர்களா? பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தை வளர்ந்து திருமணம் செய்யும் போது மிகப் பெரிய கஷ்டத்தை எதிர் கொள்ள வேண்டும் என்ற காரணமே பெண் குழந்தைகள் சிசுவாக இருக்கும் போதே கொள்ளப்படுகிறார்கள். சமுதாயத்தில் நடக்கும் இந்த கொடுமையை அழகான முறையில் கருத்தம்மா என்ற திரைப்படம் விவரித்தது. கீழ்க்காணும் கட்டுரையும் சிசுக்கொலையின் கொடூரத்தை விவரிக்கிறது. இந்தியாவில் பெண்களை நீக்கும் வழிமுறைகள் பல உள்ளன. அவை பெண் கருக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண்களைப் பட்டினிப் போடுதல், வரதட்சனைத் தொடர்பான கொலைகள், “கௌரவ”க் கொலைகள், கருவிலேயே பெண் குழந்தைகளைக் கொல்வதற்காகத் திணிக்கபப்டும் தொடர் கருக்கலைப்பினால் விளையும் கர்பக்கால மரணங்கள் ஆகும். பெண் சிசுக்கொலைக்கெனஇந்தியாவில் ஒரு ஆழ்ந்த வேர் வரலாற்றில் உள்ளது. கிராமப்புரப் பகுதிகளில் இது மிகத் தீவிரப் பழக்கமாக உள்ளது. சிறு நகரம், பெறு நகரம் இவற்றில் வாழும் படித்த, மேல்தட்டு வர்கங்கள் பயன்படுத்தும் பாலியல் அறிந்த பின்னர் கருவிலேயேக் கொலை செய்யும் வழிமுறை விலை உயர்ந்தது என்பதால் கிராமங்களில் பெண் சிசுக் கொலையைக் கடைபிடிக்கின்றனர். பிறந்த பெண் சிசுவைக் கொல்ல மருத்துவச்சிக்கு வெறும் 100 ரூபாய் (U.S. $2.50) கொடுத்தால் போதும்.குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு, உயிரோடு புதைக்கப்பட்டு, பால் பக்கெட்டுகளில் மூழ்கடிக்கப்பட்டு அல்லது விசம் கொடுத்துக் கொல்லப்படுகின்றனர். இந்தியாவில் சிலப் பகுதிகளில் இப்பணி தந்தைக்கு அல்லது தந்தைவழி தாத்தாவுக்கு ஒதுக்கப்படுகிறது பெண் குழந்தைகள் கொல்லப்படுவதை பற்றி திருக்குர்ஆனும் கன்டிக்கிறது. அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. திருக்குர்ஆன் 16: 58,59 வரதட்சணை என்ற கொடிய சமுதாய நோய் தான் பெரும்பாலும் பெண் குழந்தைகளை சிசுவிலேயே கொலை செய்ய தூண்டுகிறது என்றால் அது மிகையான கருத்து அல்லவே! சமுதாயத்தில் வரதட்சணைக்கொடுமை மிகப் பெரிய சவாலாக இருக்கிறது . நம்முடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இந்த வரதட்சணைப்பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும் . திருமணம் என்பது பருவ வயதை அடைந்த அனைவருக்கும் தேவையான ஒழுக்கமான ஒரு நடைமுறை என்று எல்லா சமுதாயமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது . இந்த நடைமுறையில் ஆண்கள் தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டாலும் பெண்களிடம் வரதட்சணை என்ற பெயரில் பொருளாதாரத்தை சுரண்டுகிறான்.சமுகமும் அதற்கு துணைபோகிறது. வரதட்சணைக்கொடுமையால் பெரும் துன்பத்தை அனுபவித்த பெண்களும் கூட தனது மகன் திருமணம் நடைபெறும் வேளையில் வரதட்சணை பேரத்தில் கடுமையாக ஈடுபடும் வினோதத்தை கண்கூடாக பார்க்கிறோம் . வரதட்சணைக்கொடுமை நாட்டில் ஒழிக்க முடியாமல் போவதற்கு பெண்களும் காரணம் . வரதட்சணை பேரம் பேசுவதிலிருந்து சீர்வரிசையை கணக்கிடுவதிலிருந்து பெண் வீட்டாரிடம் பொருளாதாரத்தை பிடுங்கி எடுப்பதில் ஆண் வீட்டு பெண்களுக்கு பங்கு அதிகம் . இந்த நிலை மாற வேண்டும் . வரதட்சணை பாதிப்புக்கு உள்ளான பெண்கள் தங்கள் மகன்களுக்கு திருமணம் செய்யும்போது தனக்கு ஏற்பட்ட பாதிப்பை நினைத்து பார்த்து என் மகனுக்கு வரதட்சணை வாங்க மாட்டேன் என்ற உறுதியுடன் செயலாற்ற வேண்டும் . பருவ வயது முதலே ஆண் மகனிடம் நீ சம்பாதித்து தான் உன் திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும் . மாமியார் மருமகள் சண்டைகள் பெரும்பாலும் வரதட்சணையின் காரணமாக நடக்கிறது . வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த மருமகள் மாமியாரை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. நான் வெருங்கையுடன் வரவில்லை என்று பெருமை பேசுகிறாள்.தன் கணவனை விலை கொடுத்து வாங்கிவிட்டதாக எண்ணும் அவள் கணவன் குடுத்தினரை மதிப்பதில்லை. பெற்ற மகனிடம் தனக்கே அதிக உரிமை இருக்கிறது என்று நினைக்கும் தாய் தன்மகனை வரதட்சணை வாங்கியது மூலம் சிறுமைபட்டுவிட்டதை ஒப்புக் கொள்ள தயாரில்லை. நடுவில் வரதட்சணை மாப்பிள்ளை தாயா? தாரமா? என்ற நிலையில் தாரமே என்றமுடிவுக்கு வந்தால் பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் கேவலத்தை செய்கிறான். எந்த மகனின் வாழ்க்கை சிறப்பாக இருக்கவேண்டும் என்று வரதட்சணை வாங்கினார்களோ அந்த மகனே அந்த பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டானே என்று எண்ணி எண்ணி கண்ணீர் சிந்துகிறார்கள். தாய்தான் முக்கியம் என்று முடிவு செய்தால் மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருகிறான். விவாகரத்துக்காக வரதட்சணை வாங்கிய தொகையைவிட பல மடங்கு செலவு செய்கிறான். விவாகரத்துக்காக பல கஷ்டத்தை எதிர் கொண்டு விகாரத்து பெறப்படுகிறது. விவாகரத்து பெற்ற முன்னால் தம்பதியர்கள் மருமணம் செய்ய முயற்சி செய்கிறார்கள் .அவர்கள் குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பெண் மருமணம் செய்து கொள்வதில் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. வற்புறுத்திதான் திருமணம் நடக்கிறது .ஆனாலும் புதிய கணவர் இரண்டாம் தாரமாகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ அல்லது வயோதிகராகவோ இருக்கும் நிலையில் அந்த திருமணத்திலும் பல பிரச்சினைகளோடுதான் வாழ்க்கை நடக்கிதுகின்றனர். ஆண் மருமணம் செய்யும் போது முன்னால் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் நிலை மிகவும் கஷ்டத்தை அனுபவிக்க கூடிய நிலையில் இருக்கிறது . மாற்றான் தாய் மனப்பான்மை என்ற உதாரணம் பல இடத்தில் பயன்படுவதை பார்க்கிறோம் . மாற்றான் தாயிடம் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் படும் துன்பங்கள் ஏராளம். பெற்ற தாயிடம் அன்பையும் பாசத்தையும் அனுபவித்து வந்த குழந்தைகள் இப்போது அடியையும் அவமானத்தையும் அனுபவித்து வருகிறார்கள் . புதுப்பொண்டாட்டிக்கு குழந்தை பிறந்தது விட்டால் இந்த குழந்தைகளின் நிலை இன்னும் பறிதாபம். பல பிரச்சினைக்கு பின்னர் அந்த குழந்தைகள் சிறுவர் இல்லங்களில் அடைக்கலமாகின்றனர். இது போன்ற அவலங்கள் சமுதாயத்தில் நடப்பதுக்கு வரதட்சணைக்கொடுமையும் முக்கிய காரணியாக அமைகிறது . பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் மனநிலையில் மிகப்பெரிய மாறுதல் ஏற்படுகிறது . பல குழந்தைகள் சமூக விரோதியாகவோ அல்லது கடினமான உள்ளம் கொண்டவர்ளாகவோ மாறுகின்றனர். இப்படி ஒரு தலைமுறையையும் தாண்டி பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது இந்த வரதட்சணைக்கொடுமை . வரதட்சணையினால் சமுதாயம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான பாதிப்புகளுக்கு ஆற்படுகிறது. காலகாலமாக நடந்து வரும் இந்த கொடுமையை ஒழித்து கட்ட வேண்டுமானால் இந்த கொடிய முறையின் பாதிப்புகளை அனைவரும் உணர வேண்டும் . வரதட்சணைக்கொடுமைக்கு எதிரான பேச்சுக்கள் எழுத்துக்கள் பிரச்சாரங்கள் அதிகரிக்க வேண்டும் . சமூகத்தில் அக்கறை கொண்ட இயக்கங்கள் அமைப்புகள் வரதட்சணைக்கு எதிரான தங்கள் கொள்கை நிலைபாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் . இந்த பணியில் நாம் அறிந்தவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கம் மட்டுமே கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு தங்கள் உறுப்பினர்கள் எவரும் வரதட்சணை வாங்காமல் பெண்ணிற்கு மஹர் என்ற பொருளாதாரத்தை கொடுத்து திருமணம் செய்யும் நிலையை உறுவாக்கி வெற்றி அடைந்துள்ளது. அவர்களை பின்பற்றி அனைவரும் இதை செயலாக்கத்திற்கு கொண்டு வர முடியும் . முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்பார்கள் . வரதட்சணை என்பது பொருளாதார பிண்ணணியை கொண்டுள்ளதால் வரதட்சணை வாங்கினால் வாங்கிய அளவுக்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்பது போன்ற கடுமையான சட்டத்தை இயற்ற அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் . வரதட்சணை வாங்கினால் வாங்கிய தொகைக்கு நூறு சதவிகிதம் வரி விதிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் . கடுமையான சட்டமும் கடுமையான பிரச்சாரங்களும் இந்த வரதட்சணைக்கொடுமையை ஒழிக்க உதவலாம்... முடிந்தது

வரதட்சணைக்கொடுமை

எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் நம்முடைய தொப்புள் கொடி உறவான சுவாமி ராமனத் அவர்கள் உலகமே உற்று நோக்கும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

மேலும் அவர்கள் தமது பெயரை ஸல்மானுல் பாரிஸ் எனவும் மாற்றிக் கொண்டார்கள்.

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவாயாக...

சத்தியத்திற்கு வருகை தந்த சுவாமி ராமனத்

இறைவனின் மாபெரும் கிருபையினால் ரஷ்யாவை சேர்ந்த சகோதரி ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு புனித திருக்குர்ஆனின் ஒவ்வொரு வரிகளும் தன்னை இஸ்லாத்தை காதலிக்க வைத்ததாக மகிழ்வுடன் கூறினார்,

ஐக்கிய அமீரகத்தில் Qari Abul Kabeer Haidari மூலம் இஸ்லாத்தை தழுவியதாக கூறியுள்ளார்,

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.....

இஸ்லாத்தை தழுவிய ரஷ்ய சகோதரி

தென் சென்னை மாவட்டம், K .K .நகர் கிளை சார்பாக கடந்த 06.01.2013 அன்று, சரவணன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டு தன் பெயரை சாஜித் என்று மாற்றி கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

K .K .நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சரவணன்


இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்,

இவர்களுக்கு கிளைத் தலைவர் சங்கரன் பந்தல் அப்துல் அஜீஸ் மற்றும் அவர்களின் துனைவியார் சுமையாஹ் அப்துல் அஜீஸ் அவர்களும் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கிகூறி கலீமாவையும் சொல்லிக் கொடுத்ததுடன் சகோ, PJ அவர்களின் ஆங்கில நூல்களையும் மற்றும் பல இஸ்லாமிய ஆங்கில நுல்களையும், ஆங்கில திருக்குர்ஆனையும் வழங்கினார்கள்,

அவர்களது பெயர்களின் விபரம் வருமாறு - OLD NAME: : PLACE IN PHILLIPINE: NEW NAME :-

1) CRISTIN LEJERALDE = ROXAS ISABELA = HANNA

2) AMY MANGASUEY = CONNER KALINGA = SULAIJA

3) STENELLY PACTOL = CEBU CITY = AMEERA

4) BABYLINE SOBREPENA = TAGIG MM = FATIMAH

5) GEMMA ACERIT = SAN MARIAO ISA = JAMEELA

என்றும் மாற்றிக்கொண்டனர்,

இந்த சகோதரிகள் அனைவரும் கிளை செயலாளர் நிஜாம் அவர்களின் நிறுவனத்தில் பணி பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

சத்தியத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிகளுக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்,

இறைவனின் மாபெரும் கிருபையினால் சவூதி அரேபியா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையில் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த 5 கிறித்தவ சகோதரிகள் புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..........!!

சவூதி அரேபியா TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள்