11/18/2011

                            
புகழ்யாவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரியது. சாந்தியும் சமதானமும் இறைதூதர் மீதும், இஸ்லாத்தை ஏற்ற அனைவர் மீதும் உண்டாவதாக!
 அன்பார்ந்த அருமை சகோதரிகளே!  நமக்கு மார்க்க அறிவை வழங்கும் இஸ்லாமிய தஃவா வகுப்பின் தலைவர் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு…

 உங்கள் மத்தியில் என்னைக்கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் பேசவிரும்புகிறேன்.
 இன்று உலகில் பல்வேறு மதங்கள் இருப்பதை நாம் அறிவோம். அவற்றுள் இஸ்லாம் யாவற்றிலும் தனித்தன்மையுடன் விளங்கி வருகிறது.

 இஸ்லாத்தில் கொள்கை, கோட்பாடு, வணக்கம், வழிபாடு, கடமை, கட்டுப்பாடு, அன்றாட வாழ்க்கை நெறிகள் என எடுத்துக் கொண்டால் எதிலுமே தனித்தன்மையோடு விளங்கி வருவதைப் பார்க்கிறோம்.
இஸ்லாம் குறிப்பிட்டமொழியினருக்கோ,பகுதியினருக்கோ,குலத்தின ருக்கோ அல்லது நிறத்தினருக்கோ உரிய மார்க்கம் அன்று. அது மனித குலம் அனைத்துக்கும் சொந்தமான முழமையான ஒரு வாழ்க்கைத் திட்டமாகும்.

இஸ்லாம் மனித நேயத்தையும் சகோதர வாஞ்சையையும், ஏற்றத்தாழ்வற்ற சமதர்ம சமத்துவததையும் போதிக்கிறது. பிறப்பால் உயர்தவர், தாழ்ந்தவர் என்றோ., உயர்குலத்தவர், கீழ்குலத்தவர் என்றோ, ஆண்டான் அடிமை என்றோ, ஏழை பணக்காரன் என்றோ ஏற்றத்தாழ்வின்றி மனித குலத்தவர் அனைவரும் ஒரு தாய்வயிற்றில் பிறந்த மக்களாகவே கருதுகிறது. ‘முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்’ என்ற உயர்ந்த நெறியைப் போதிக்கிறது.
இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை. புரோகிதருக்கு இஸ்லாத்தில் இடமே இல்லை.கற்களையும்,படைப்பினங்களையும்,இறந்தவர்களையும் வணங்கும் அறியாமை இஸ்லாத்தில் இல்லை.காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம் இல்லை. கடவுள் ஆசியை வழங்கும் போலித்தனம் இல்லை.மூடப்பழக்கங்களும், கற்பனைக் கதைகளும் அங்கு இல்லை.
இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் எவரும் தன் சுயமரியாதையை இழக்கக் கூடாது. குனிவது, பணிவது, சாஷ்டாங்கமாக விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை. நடைமுறைப்படுத்த எளிதானவை. கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் வேதத்தில் ஒரு புள்ளி கூட மாற்றம் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
இஸ்லாம், மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சிறப்பாக வழிகாட்டுகிறது. மனிதனை தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும், நேர்மையுடனும் வாழச் செய்கிறது. எனவே ‘தூய இஸ்லாத்தின் உயர் போதனைகள் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நான் சார்க்திருந்த இந்து மதத்தில் ஆரியத்தின் சதிக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்பட்டு அதனிடத்தில் அடிமைப்பட்ட பல்வேறு இந்திய சமூகத்தினரை சத்திரிய,வைசிய,சூத்திர வர்ணங்களாகப்பிரித்து கூறுபோட்டனர். பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணரும், தோளிலிருந்து சத்திரியரும்,தொடையிலிருந்து வைஸ்யரும், காலிலிருந்து சூத்திரரும் தோன்றினர் என ‘மனுஸ்மிருதியில்’ எழுதி வைத்துள்ளனர்.
‘சாதிக்குள் சாதி அவற்றுள் தனித்தனி நீதி’ என சாதிச்சண்டைகளும், வர்ணாசிரம முறைகளால் கீழ்சாதி மேல்சாதி எனப்பிரித்து, மனித உரிமைகள் பறிக்கப்பட்டு ஆடு மாடு மிருகங்களை விட மோசமான வர்களாக-தீண்டத்தகாத வர்களாக நடத்தப்படும் அவல நிலைகளையும் அங்கே பார்க்கமுடிகிறது.இன்றும் இந்து மதத்தைச் சார்ந்த அரிஜன னுக்கு சமூகத்தில் எந்த அந்தஸ்தும் கிடையாது. ‘பாலக்காட்டில் நிலத்தோடு சேர்த்து அதில் வேலை செய்யும் அரிஜனனனும் விற்கப்படுகிறான்’ அவர்களுக்குக் குடிப்பதற்காக கொடுக்கப்படுவது மலத்தண்ணீர்- மலம் கலந்த தண்ணீராம். என செய்தித்தாளில் வந்த  செய்திகள் உள்ளத்தையே உலுக்கியது.இருமாதங்களுக்கு முன்னர் கர்னாடக மாநிலத்தில் மனிதனை- அரிஜனனனை மலம் தின்னச் செய்தனர். என்ற செய்தி வந்துள்ளது.
இவ்வாறு இந்தியாவில் அரிஜன- தலித் மக்கள் என 30-40- கோடி மக்கள் மனிதர்களேயல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் செருப்பணியவோ, ஏன் ஆண்களும் ஏன் பெண்களும் மேலாடை அணிவதற்குக் கூட அனுமதியில்லை.உயர் ஜாதியினர் வசிக்கும் தெருவில் நடமாட அனுமதியில்லை. ஏனென்றால் மனிதர்களிலே இவர்களெல்லாம் ‘இழிவானவர்கள’!. இவர்கள் மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை.
ஆனால், இதே மக்கள் இஸ்லாத்தை தழுவி விட்டால் அடுத்த நிமிடமே இவர்கள் சாதிக் கூண்டிலிருந்து வெளியேறி சுதந்திரமானவர்களாக தலை நிமிர்ந்து நடக்க முடியும்.
கருப்பினத்தைச்சார்ந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதும் வெள்ளைநிற ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாத்தில் தொழுகை நடத்திய அதிசயமும், கீழ் சாதியினர் தொழுகையின் முன் வரிசையில் இடமளிக்கப்படும் அற்புதமும், தலித் இன மக்கள் மேல் ஜாதிப் பெண்ணை மணம் புரியும் விந்தையும் இஸ்லாத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
ஏற்றத்தாழ்வற்ற இஸ்லாத்தின் இந்த அற்புதமான சித்தாந்தங்களால் இன்று இந்தியாவிலும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் உலகின் பல பாகங்களிலும் இனத்தாலும், நிறத்தாலும், மொழியாலும் ஒடுக்கபப்பட்ட கருப்பின மக்களும், இந்துக்களும், கிறித்தவர்களும் ஏன் வெள்ளையர்களும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணையும் அதிசயத்தை உலகம் முழுவதும் கண்டு அதிசயித்து நிற்கிறது.
மனித சமுதாயத்தின் அரசியல்,சமூகம், பொருளாதாரம், மனித உரிமைகள் அனைத்திற்கும் தீர்வாக விளங்கும் ஒரே மதமாக-மார்க்கமாக இருப்பது இஸ்லாம் ஒன்று தான்! அதனால் தான் இந்த ஒரே ஒரு மார்க்கத்தை மட்டுமே உலகில் இறைவன் அங்கீகரித்துள்ளான்.
இறைவன் கூறுகிறான்: ‘இன்னத்தீன இந்தல்லாஹில் இஸ்லாம்’
إِنَّ الدِّينَ عِندَ اللّهِ الإِسْلاَم                                                                               நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்ககொள்ளப்பட்ட) மார்க்கமாகும் (3:19)
எனவே அன்பார்ந்த சகோதரிகளே! நமது உயிரினும் மேலான இஸ்லாத்திற்காக, இஸ்லாத்தின் உயர்ந்த கொள்கைக்காக நாம் எத்தகைய தியாகமும் செய்ய முன் வரவேண்டும். நமக்கு கொள்கை தான் பெரிது. உறவோ, சொத்தோ, சுகமோ அல்ல என்பதை கூறிக் கொண்டு விடைபெறுகிறேன்.
وَآخِرُ دَعْوَاناْ أَنِ الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِين َ
வஆகிறு த.வானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
—————————————————————————————–
وَآخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ
‘எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே’ என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும்.10:10)-
—————————————————————————————–
(அண்மையில் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரியான பர்வீன் பானு  (பழைய பெயர் புகழ்மணம்) யான்பு ராயல் கமிசன் தஃவா மன்ற பெண்கள் பிரிவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments