Archive for பிப்ரவரி 2012





 புதிதாய்இஸ்லாத்திற்கு வந்துள்ள இந்த மனிதர் வெறும் மூன்றே ஆண்டுகளில்திருக்குரானை தமிழில் மனனம் செய்துள்ளார்.மேலும் படிக்க  Click Here

இஸ்லாத்தை தழுவி மூன்று ஆண்டுகளில் திருக்குரானை தமிழில் மனனம் செய்த ஓர் அதிசயம் ..!

ஏ.அப்துல்லாஹ் : கொழும்பு அரசியல் வாதியின் செயல்பாடு குறித்து பலரும் அதிருப்தி சர்வதேச புகழ் பெற்ற இஸ்லாமிய பிரசாரகரான கலாநிதி பிலால் பிலிப்சை இலங்கையில் இருந்து திருப்பி அனுப்புவதற்கு சில உள்ளூர் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பின்னணியில் மேற்கொள்ளப் பட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது என்று தெரியவருகின்றது.
அதேவேளை கடந்த வாரம் ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்த கலாநிதி பிலால் பிலிஸிற்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி இலங்கைக்குள் நுழைய விடாது விமான நிலையத்தில் வைத்து அவரை திருப்பி அனுப்ப மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் , பைசர் முஸ்தபா மற்றும் சட்டத்தரணி அலி சப்றி ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று நவமணி பத்திரிகை தெரிவித்துள்ளது .

ஜெமீகா நாட்டில் பிறந்து கனடாவில் வளர்ந்த ஒரு கிஸ்தவர்-இஸ்லாமிய பிரசாரத்தில்


TNTJ ஜித்தா மண்டலம் “தபூக்” கிளையில் 17/02/2012 அன்று தபூக் [King Khaled Hospital] பணிபுரியும் [அல் மஜ்ஜால்-அல் அரபி] கம்பனியைச் சேர்ந்த-அரியலூர் மாவட்டம் – காரூரைச் சேர்ந்த சகோதரர் முத்து வேல் முருகன் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என மாற்றிக் கொண்டார்.
TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்கி நூல்கள் மற்றும் சீடிக்கள் வழங்கினார்கள்.

இஸ்லாத்தை ஏற்ற வேல்முருகன்




சுவிட்சர்லாந்து நாட்டில் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கெதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் இஸ்லாத்தை தழுவினார்.

மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கியவர்தான் ஸ்ட்ரீக். இவர் சுவிஸ் பீப்பிள்ஸ் பார்டியின் முக்கிய நபர்.

மினாராக்கள் கட்டுவதை எதிர்த்த அரசியல் தலைவர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியது சுவிஸ் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது.

தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்தார்.

தற்ப்போது சுவிஸ் நாட்டில் 4 மஸ்ஜிதுகளே உள்ளன. ஐந்தாவது மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டுவது தானாக வேண்டுமென்பது ஸ்ட்ரீக்கின் விருப்பமாகும். மதரீதியான பொறுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பிரச்சாரகராக தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவிக்கிறார்.

ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தை குறித்து புரிந்துக்கொள்ள விருப்பமுண்டு என்று முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பான ஒ.பி.ஐயின் தலைவர் அப்துல் மஜீத் அல்தாயி தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறும்போது "சிலர் ஸ்ட்ரீக்கைப் போல் பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து அறிய முயற்சிக்கின்றனர். இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே ஸ்ட்ரீக் குர்ஆனை படித்தார். குர்ஆனை ஆழமாக சிந்தித்த போது முடிவு எதிர்மறையாக மாறியது".என்றார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சுவிஸ்:மினாரா எதிர்ப்பு பிரச்சாரகர் இஸ்லாத்தை தழுவினார்

இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்துஎழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.


நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்

முன்னால் கிருத்தவ கன்னியாஸ்திரி Irena Handono இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான ஹோர் அல் அன்ஸ் மர்கஸில் கடந்த வாரம் ராஜேந்திரன் என்ற சகோதரர் சமத்துவமிக்க இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை தாவூத் இபுராஹிம் என்று மாற்றி கொண்டார் இவருக்கு திரு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க்க சட்டங்கள் குறித்த புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தை ஏற்ற ராஜேந்திரன்


தென் சென்னை மாவட்ம் கே.கே.நகர் கிளையில் 06.01.2012 அன்று “ப்ரீத்தி” என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை “சபானா” என்று மாற்றி கொண்டார்கள்.
இவருக்கு பெண்களுக்கான சட்டங்கள், தொழுகை முறை, ஹிஜாப் அணியும் முறை ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய அடிப்படை கல்வி, துஆகளின் தொகுப்பு ஆகிய நூல்களும் திருக்குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

கே.கே நகர் - இஸ்லாத்தை ஏற்ற ப்ரீத்தி