11/12/2011
இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கும் சகோதரர் இராம சுப்பிரமணியன் என்ற மாற்ற மத சகோதரரை மேடைக்கு வருமாறு அழைத்தார்.அவருக்கு மௌலவி நஜ்முல் ஹுசைன் அவர்கள் கலிமாவை சொல்லிக்கொடுத்து இராமசுப்பிரமணியன் இஸ்லாத்தை தழுவினார்.தான் தேர்ந்தெடுத்த பெயரான ரய்யான் அஹ்மத் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.
சகோதரர் ரய்யான் அஹ்மத் அவர்கள் தனக்குள் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொண்டார்.மேலும் தன்னுடன் பணிபுரியும் சக தோழர்களின் ஏளனத்தை பொருட்படுத்தாமல் உறுதியாக தான் நின்றதாகவும் 10 நோன்பையும் நிறைவேற்றியிருக்கின்றேன் என்றும் கூறினார்.