11/11/2011

பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை  ஒரு லட்சியத்தை-100,000- எட்டுகின்றது இவர்களில் பிரிட்டிஷ்  பெண்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்பவர்களில் முன்னிலையில் உள்ளனர் என்று நேற்று-3.01.2011- லண்டனில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாக வோல்ஸ் ஒன்  லைன்-walesonline- தெரிவித்துள்ளது-ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை  ourummah.org  உங்களுக்கு  தமிழில் தருகின்றது.
அந்த ஆய்வறிக்கை நம்பிக்கை விவகாரங்கள் -Faith Matters- என்ற அமைப்பு சார்பில் கெவின்  பிரிஸ்-Kevin Brice-  என்ற  ஸ்வன்சியா பல்கலை கழக -Swansea University-ஆய்வாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது    அதன் கணக்கெடுப்பில்   பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் 600,00 ஆயிரம் வரை இருந்து தற்போது 900,00 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம் -100,000 – வரையில் அதிகரித்திருக்கும் என்று  தெரிவித்துள்ளது , கடந்த ஆண்டில் மட்டும் 2010- பிரிட்டனில் 5200 பேர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றது விரிவாக பார்க்க
கடந்த வருடம்   இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ள 122 நபர்களில்  செய்யப்பட்ட ஆய்வில் 56 வீதமானவர்கள் வெள்ளை இன  பிரிட்டிஷ் பெண்கள் என்றும் 62 வீதமானவர்கள் பெண்கள் என்றும் சராசரியாக  இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களின் வயது சற்று 27 க்கு மேல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அவர்களில்   இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் பெரும்பான்மையானவர்கள்  அவர்களில் குடும்பத்தின்  எதிர்மறையான மனோபாவம் காரணமாக கஷ்டங்களை எதிர்கொண்டதாகவும் சில காலம் கழிந்ததும் எதிர்மறையான மனோபாவம் பெரிதும் சாதகமான மனோபாமாக மாறுவதாக அவர்கள் தெரிவித்ததாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் பெரும்பான்மையனவர்கள் தாம் முஸ்லிம் மற்றும் பிரிட்டிஷ் என்று காட்டுவதாகவும்,  முஸ்லிம்- கள்  பிரிட்டிஷ் சமூக மற்றும்  கலாச்சாரத்தில்  நம்பிகையின்மையை உணரவில்லை என்றும் தெரிவிக்கின்றது.
ஆனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதற்கு முன்னர் தமது சொந்த வாழ்க்கையை தொலைந்திருந்ததாகவும் வாழ்வின் அர்த்தம்  இன்றி இருந்ததை உணர்ததாக  தெரிவித்துள்ளதுடன் மத நம்பிக்கை குறைந்த பிரிட்டிஷ்  மக்களிடம் ஒழுக்கமற்ற பண்புகள் சாதாரண விடையமாக மாறிருப்பதாகவும் அவை அச்சத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
அவர்களின் மிக சிறு தொகையினர் பிறந்த தினம் கொண்டாடுவதையும், இசை கேட்பதையும், கற்பனை கதைகளை வாசிப்பதையும் இஸ்லாம் தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர், 10 வீதத்துக்கும் குறைவானவர்கள் குடும்ப கிறிஸ்மஸ் விருந்தில் பங்குகொள்வது தடைசெய்யப்பட்டதாக பார்கின்றனர் என்றும்  அந்த அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது அணைத்து  நெருங்கிய நண்பர்களும்  முஸ்லிம்கள் என்று தெரிவித்துள்ளனர்  ஆனால் அவர்களின் அனைவரும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து தம்மை ஒதுக்கி கொள்ளக் கூடாது என்று உணர்வதாக தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களில் மிக பெரும்பான்மையானவர்கள் தமது தோற்றத்தை மாற்றிகொண்டனர் , அவர்களில் குறிபிடத்தக்க பெரும்பான்மையினர் ஹிஜாப்,போன்ற உடைகளை ஏற்றுகொண்டுள்ளனர் ஆனால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முகத்தை மூடி  அணியும் உடையான நிகாப் என்பதுடன் உடன்படவில்லை ஆனால் அதை அணிவது பெண்களின் உரிமை என்பதற்கு ஆதரவாகவுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிப்பதாக வோல்ஸ் ஒன்  லைன் மேலும் தெரிவித்துள்ளது
பொதுவாகஇஸ்லாத்தை ஏற்றுகொண்ட பிரிட்டிஷ் மக்கள்  பொதுவான வாழ்க்கையை நடத்துவதாகவும் அவர்கள் ஏனைய பிட்டிஷ் மக்களை அடிப்படையில் இஸ்லாத்துக்கு எதிரானவர்களா பார்கவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிப்பதாக வோல்ஸ் ஒன்  லைன் மேலும்  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments