Archive for 2013

எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் நம்முடைய தொப்புள் கொடி உறவான சுவாமி ராமனத் அவர்கள் உலகமே உற்று நோக்கும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

மேலும் அவர்கள் தமது பெயரை ஸல்மானுல் பாரிஸ் எனவும் மாற்றிக் கொண்டார்கள்.

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவாயாக...

சத்தியத்திற்கு வருகை தந்த சுவாமி ராமனத்

இறைவனின் மாபெரும் கிருபையினால் ரஷ்யாவை சேர்ந்த சகோதரி ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு புனித திருக்குர்ஆனின் ஒவ்வொரு வரிகளும் தன்னை இஸ்லாத்தை காதலிக்க வைத்ததாக மகிழ்வுடன் கூறினார்,

ஐக்கிய அமீரகத்தில் Qari Abul Kabeer Haidari மூலம் இஸ்லாத்தை தழுவியதாக கூறியுள்ளார்,

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.....

இஸ்லாத்தை தழுவிய ரஷ்ய சகோதரி

தென் சென்னை மாவட்டம், K .K .நகர் கிளை சார்பாக கடந்த 06.01.2013 அன்று, சரவணன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டு தன் பெயரை சாஜித் என்று மாற்றி கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

K .K .நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சரவணன்


இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்,

இவர்களுக்கு கிளைத் தலைவர் சங்கரன் பந்தல் அப்துல் அஜீஸ் மற்றும் அவர்களின் துனைவியார் சுமையாஹ் அப்துல் அஜீஸ் அவர்களும் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கிகூறி கலீமாவையும் சொல்லிக் கொடுத்ததுடன் சகோ, PJ அவர்களின் ஆங்கில நூல்களையும் மற்றும் பல இஸ்லாமிய ஆங்கில நுல்களையும், ஆங்கில திருக்குர்ஆனையும் வழங்கினார்கள்,

அவர்களது பெயர்களின் விபரம் வருமாறு - OLD NAME: : PLACE IN PHILLIPINE: NEW NAME :-

1) CRISTIN LEJERALDE = ROXAS ISABELA = HANNA

2) AMY MANGASUEY = CONNER KALINGA = SULAIJA

3) STENELLY PACTOL = CEBU CITY = AMEERA

4) BABYLINE SOBREPENA = TAGIG MM = FATIMAH

5) GEMMA ACERIT = SAN MARIAO ISA = JAMEELA

என்றும் மாற்றிக்கொண்டனர்,

இந்த சகோதரிகள் அனைவரும் கிளை செயலாளர் நிஜாம் அவர்களின் நிறுவனத்தில் பணி பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

சத்தியத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிகளுக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்,

இறைவனின் மாபெரும் கிருபையினால் சவூதி அரேபியா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையில் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த 5 கிறித்தவ சகோதரிகள் புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..........!!

சவூதி அரேபியா TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள்

இறைவனின் மாபெரும் கிருபையினால் பிரிட்டனை சேர்ந்த சகோதரி ஆனி வில்லியம் கென்னடி புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

பாலஸ்தீனம் காஸா நகரில் உள்ள அறிஞர்கள் சங்க தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது தான் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறியதாக உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள்,

மேலும் தனது பெயரை கதீஜா ஹசன் என்றும் மாற்றிக் கொண்டார், அவர் இஸ்லாத்தை தழுவும் போது அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சலீம் சலமா அவர்களும் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.....

பாலஸ்தீனத்தில் இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் சகோதரி.

இறைவனின் மாபெரும் கிருபையினால் ஐக்கிய அரபு நாடுகளான துபாயில் இந்தியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், தங்களுடைய வாழ்க்கை நெறியாக புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்,

அவர்கள் தூய இஸ்லாத்தை தழுவிய பின் தங்களுடைய பெயர்களை சாரா, ஆபிதா, மரியம், முஹம்மது அப்துல்லாஹ், எஸ்ஸா என்றும் மாற்றிக் கொண்டார்கள்

நன்றி : Gulf News & Non-muslims who revert to Islam

துபாயில் இஸ்லாத்தை தழுவிய இந்திய குடும்பத்தினர்