11/05/2011



ஆசாத் நகரில் இஸ்லாத்தை ஏற்ற அமல்ராஜ் மற்றும் ராமச்சந்திரன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக தாவா பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தாவா பணியின் மூலம்அமல்ராஜ் மற்றும் ராமச்சந்திரன் என்ற மாற்றுமத சகோதரர்கள் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் தங்களின் பெயர்களை முறையே அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மத் சபிக் என்று மாற்றி கொண்டனர்
மேலும் இவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வியை பயிற்றுவிப்பதற்காக சேலம் தாவா சென்டருக்கு கடந்த 11-10-2010 அன்று ஒரு மாதகால பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர். தஞ்சை வடக்கில் இஸ்லாத்தை ஏற்ற குமார் குடும்பத்தினர்!
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்கா கல்யானபுரத்தை சார்ந்த குமார் – ராணி தம்பதியினர் தன் மூன்று குழந்தைகளுடன் 06.10.10 புதன்கிழமை இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்க மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கும் வண்ணம் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்களை வழங்கினார்கள்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments