3/05/2012

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில் இஸ்லாத்தை போதிக்கும் ஒருவரின் முன்னிலையில் குடம்பத்துடன் இஸ்லாத்தில் இணைந்த நிகழ்ச்சியை இங்கு காணலாம். Video இவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பற்றி அவர்களுக்கு விளக்கம் கூறப்பட்டது. ஏக இறைவனை மட்டும் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு தூதர் தான் என்றும் அவர்களை முஸ்லிம்கள் யாரும் வழிபடுவதில்லை என்றும் உணர்த்தப்பட்டது. ஏக இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதத்தில் தன்னைப் பற்றிக் கூறியிருப்பதையும் அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

அதாவது,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்-குர்ஆன் 112:1-4)

என்று ஏக இறைக் கொள்கையின் உரைக் கல் அவர்களுக்கு போதிக்கப்பட்டது. மேலும் ஒருவர் சத்திய இஸ்லாம் மார்க்கத்தை தங்களின் வாழ்வு நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு, ‘இந்த அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்றும் நம்பிக்கைக் கொண்டு வாயால் உறுதி மொழி கூற வேண்டும்’ எனவும் அவர்களுக்கு கூறப்பட்டது.

இவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட அவர்கள் இறுதியில் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments